கிராமப்புற பகுதிகளில் வாழும் மக்கள் நிலையான வருமானத்தைப் பெற தமிழ்நாடு அரசு, " வாழ்ந்து காட்டுவோம்" என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற வணிகச் சூழல் வளர்ச்சி, தொழில் திட்டங்களுக்கான நிதி விநியோகம், திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகள் மற்றும் திட்ட மேலாண்மை போன்ற நான்கு கூறுகளை இத்திட்டம் கொண்டுள்ளது. தற்போது, இந்த திட்டத்தின் கீழ் பணியாற்ற, பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள்:
இதர விவரங்கள்: பதவி வாரியான காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை சம்பள விதிகள் ஆகியவை வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (Vaazhndhu Kaattuvom Project - Department of Rural Development and Panchayat Raj) அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பம் செய்வது எப்படி: இதற்கான விண்ணப்பங்களை https://tnjobs.tnmhr.com/Landing.aspx இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2023 ஆகும்.
இதையும் வாசிக்க: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வேலை... ரூ.30,000 வரை சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்..!
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு முறை இருக்கும். அனைத்து பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு ஒரே நாளில் நடைபெறும். ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்தாலும், ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டும் எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.