Home /News /employment /

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை... கல்வித் தகுதி, பணி விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்!

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை... கல்வித் தகுதி, பணி விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்!

வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை

வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை

V.O.Chidambaranar Port Trust Recruitment 2022 | வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள Pilot பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு அதற்கான இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்கவும் ...
    வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் (V.O. Chidambaranar Port Authority), தூத்துக்குடி துறைமுகம் இந்தியாவின் 12 முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றாகும். 2011 ஆம் வருடம் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.

    இந்த துறைமுகத்தில் காலியாக உள்ள 03 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. Pilot பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.vocport.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :















































    நிறுவனம் / துறைV.O. Chidambaranar Port Trust – வ. உ. சிதம்பரனார் துறைமுகம்
    பணியிடம்தூத்துக்குடி - தமிழ்நாடு
    பணிPilot
    விண்ணப்பிக்க கடைசி தேதி26/06/2022
    சம்பள விவரம்ரூ.80,000 – ரூ.200,000 /-
    கல்வித் தகுதி விவரம்Any Masters Degree
    மொத்த காலிப்பணியிட விவரம்03 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
    விண்ணப்பிக்கும் முறைoffline மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)
    Email IDdc@vocport.gov.in

    வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    வ. உ. சிதம்பரனார் துறைமுகம் வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் அறிவிப்பில் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 26/06/2022ம் தேதி கடைசி நாள். அதற்க்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : V.O.Chidambaranar Port Authority, Tuticorin – 628004

     அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://www.vocport.gov.in

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Advertisement%20for%20contract%20pilot.pdf

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி