இந்தியாவில் சமீப காலங்களாக ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு இளைஞர்களும் பல வெளிநாட்டு கம்பெனிகள் சேர்ந்து தங்களின் தொழில்நுட்ப திறனைத் திறம்பட வெளிக்கொணர்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் IBM, CTS, Microsoft, Facebook, Amazon, Oracle, HP போன்ற பல அமெரிக்க நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணியாற்றி வரும் நிலையில், டெக்சஸை தலைமையிடமாகக் கொண்ட மற்றொரு அமெரிக்க நிறுவனமான அக்கோலைட் டிஜிட்டல் ((Accolite Digital) அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் பணியாளர்களின் எண்ணிக்கையை 3 மடங்கு அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்து வருகிறது.
இதுகுறித்து அக்கோலைட் டிஜிட்டல் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான லீசா காசா தெரிவிக்கையில், இந்தியாவில் பணியாளர்களின் எண்ணிக்கையை 3 மடங்கு அதிகரித்து சுமார் 8,500 ஆக உயர்த்த திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்நிறுவனத்தின் வருவாயை 500 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், வருகின்ற 2025ம் ஆண்டுக்குள் உலகளாவிய பணியாளர்களின் எண்ணிக்கையை 4 மடங்கு அதிகரிக்க அதாவது 10 ஆயிரம் நபர்களாக்க இலக்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்நிறுவனம் தற்போது உலகளவில் 2,600 வல்லுநர்களைக் கொண்டுள்ள நிலையில் அதில் 2,400 பேர் இந்தியாவை சார்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார். தற்போது பெங்களூரு, ஹைதராபாத், குருகிராம், சென்னை, மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் 6 டிஜிட்டல் ஆய்வகங்கள் உள்ள நிலையில் மேலும் இதனை பல இடங்களில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் இதில் இந்தியர்களைத் தான் அதிகளவில் சேர்க்க திட்டம் வைத்துள்ளதாகவும் காசா தெரிவித்துள்ளார்.
தற்போது மீடியா மற்றும் ஹெல்த்கேர் டிஜிட்டல் தயாரிப்பில் வேரூன்றி உள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்காக எங்களின் சேவைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக காசா தெரிவித்துள்ளார். மேலும் அக்கோலைட் டிஜிட்டல் (Accolite Digital) நிறுவனம் தொடர்ந்து 35 முதல் 55 சதவிகிதம் வரை தொழில்துறையில் முன்னணி வளர்ச்சி விகித வணிகத்தை வளர்த்து வரும் நிலையில், இதன் வருவாயை 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு உயர்த்த இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Also Read : வேலை தேடுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் இவை.!
மேலும் இந்நிறுவனம் தொடர்ந்து 35 முதல் 50 சதவிகிதம் வரை தொழில்துறையில் முன்னணி வளர்ச்சி விகிதத்தில் வணிகத்தை வளர்த்து வருவதாகவும், வருவாய் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வடக்கே மூன்று இலக்கத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார். இதோடு கனடாவைத் தளமாகக் கொண்ட கிளவுட் மற்றும் மென்பொருள் மேம்பாட்டு சேவை (cloud and software development services provider ) வழங்குநரான Xerris ஐ சமீபத்தில் வாங்கியுள்ள நிலையில், கிழக்கு ஐரோப்பியாவிலும் எங்களது நிறுவனத்தை தீவிரப்படுத்த முயற்சித்துள்ளதாகவும் அக்கோலைட் டிஜிட்டல் நிறுவனர் காசா தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் வளர்ச்சி காண விரும்புவதாகவும், மெக்சிகோவிலும் தங்களுடைய நிறுவன செயல்பாடுகளை அமைத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.