'யமஹா' மோட்டார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

news18
Updated: October 9, 2018, 11:50 AM IST
'யமஹா' மோட்டார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
யமஹா (கோப்புப் படம்)
news18
Updated: October 9, 2018, 11:50 AM IST
யமஹா மோட்டார் நிறுவனத்தில் முன் அனுபவம் உடைய ஆப்ரேட்டர்கள் மற்றும் இணை ஆப்ரேட்டர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

யமஹா மோட்டார் நிறுவனத்திற்கு முன் அனுபவம் உள்ள ஆட்கள் வேலைக்கு தேவை என்று அந்நிறுவனம் விளம்பரம் அளித்துள்ளது. அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் வடகல் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு ஆப்ரேட்டர்கள் மற்றும் இணை ஆப்பரேட்டர்கள் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர்வதற்கு ஐடிஐ(ITI), டிஎம்இ (DME), அல்லது டிஏஇ(DAE) போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியில் சேருபவர்களுக்கு அவர்களின் முன் அனுபவத்திற்கு ஏற்றவாறு ஊதியமும், சலுகைகளும் வழங்கப்படும் என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இப்பணிக்கு தொடர்புடைய அனுபவங்களான ஃபிட்டிங், வெல்டிங், பெயிண்டிங், உள்ளிட்டவையும் தெரிந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணிக்கான விண்ணப்பங்களை வரும் இந்த மாதம் 13-ம் தேதிக்குள் planthr2@yamaha-motor-india.com  என்ற இணையதள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான நேர்காணலுக்கு தேர்வு  செய்யப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
First published: October 9, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...