ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

SSC, UPSC : இந்த வாரம் விண்ணப்பிக்க வேண்டிய அரசு வேலைவாய்ப்புகள் இதோ!

SSC, UPSC : இந்த வாரம் விண்ணப்பிக்க வேண்டிய அரசு வேலைவாய்ப்புகள் இதோ!

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

Job Vacancy : யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) 2022 ஆம் ஆண்டிற்கான உதவி பொறியாளர், ஜூனியர் டெக்னிக்கல் அதிகாரி, விரிவுரையாளர் மற்றும் உதவி இயக்குநர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை அழைக்கிறது.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

இந்த வாரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய அரசு வேலைக்கான அழைப்புகள், அதற்கான அதிகாரப்பூர்வ இணையதளங்கள், கல்வி தகுதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, கடைசி தேதி உள்ளிட்ட முக்கிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

யூபிஎஸ்சி ஐஇஎஸ்/ ஐஎஸ்எஸ் 2022 ஆட்சேர்ப்பு:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) இந்திய பொருளாதார சேவை (IES) (Indian Economic Service மற்றும் இந்தியன் ஸ்டேட்டிக்ஸ் சர்வீஸ் (indian Statistical Service) தேர்வுக்கானமற்றும் 2022க்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. UPSC IES ISS தேர்வு 2022க்கான விண்ணப்பம் ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. தேர்வர்களுக்கு ‘முதல் விண்ணப்பம் முதல் ஒதுக்கீடு’ என்ற அடிப்படையில் மையங்கள் ஒதுக்கப்படும், ஒரு குறிப்பிட்ட மையத்திற்கான ஆட்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

கடைசி தேதி: ஏப்ரல் 26

விண்ணப்பிக்க: upsconline.nic.in

பிபிஎஸ்சி தலைமை ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022:

பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பிபிஎஸ்சி) மாநிலக் கல்வியின் கீழ் உள்ள மூத்த மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்ப காலக்கெடுவை நீட்டித்துள்ளது. மொத்தம் 6,421 காலியிடங்கள் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பப் படிவத்தில் மாற்றம் செய்ய ஏப்ரல் 18 கடைசித்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 11

விண்ணப்பிக்க: onlinebpsc.bihar.gov.in

also read : சென்னை ஐஐடியில் வேலை: சிவில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பேங்க் ஆஃப் பரோடா கிளை பெறத்தக்க மேலாளர் ஆட்சேர்ப்பு:

அரசால் நடத்தப்படும் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் 26 மாநிலங்களில் உள்ள 159 காலியிடங்களுக்கு ரிசிவபிள்ஸ் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் ஒட்டுமொத்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதிலிருந்து, இந்தியாவில் உள்ள வங்கிகள், NBFCகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்களில் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 14

விண்ணப்பிக்க: bankofbaroda.in/Career

உதவி பொறியாளர், விரிவுரையாளர் பணிகளுக்கான UPSC ஆட்சேர்ப்பு:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) 2022 ஆம் ஆண்டிற்கான உதவி பொறியாளர், ஜூனியர் டெக்னிக்கல் அதிகாரி, விரிவுரையாளர் மற்றும் உதவி இயக்குநர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை அழைக்கிறது. ஒவ்வொரு பதவிக்கும் தகுதிக்கான அளவுகோல்கள் வேறுபட்டவையாகும். விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 28

விண்ணப்பிக்க: upsc.gov.in

also read : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு - ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா- கிரேடு B ஆட்சேர்ப்பு 2022:

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் கிரேடு-பி அதிகாரிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு மே 28 அன்று நடைபெறும். முதல் கட்டத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ஜூன் 25 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்வில் கலந்துகொள்வார்கள். மொத்தம் 298 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடப்பதாக வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 18

விண்ணப்பிக்க: rbi.org.in

எஸ்எஸ்சி எம்டிஎஸ் 2022:

பணியாளர் தேர்வாணையம் (SSC) மல்டி டாஸ்கிங் (தொழில்நுட்பம் அல்லாத) பணியாளர்கள் மற்றும் ஹவால்தார் (CBIC & CBN) தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தை வெளியிட்டுள்ளது. விண்ணப்பப் படிவம் மார்ச் 22 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்ப படிவம் திருத்தம் மற்றும் திருத்தத்திற்கான ஆன்லைன் கட்டணம் மே 5 முதல் மே 9 வரை கிடைக்கும். இதுவரை தேர்வுக்கான தேதி உறுதியாக வெளியாகாத நிலையில், ஜூலை மாதம் தேர்வு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30

விண்ணப்பிக்க: ssc.nic.in

டிஎஸ்டிஇடி ஆட்சேர்ப்பு - 2022:

தெலுங்கானா பள்ளிக் கல்வித்துறை, தெலுங்கானா ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TS-TET-2022) பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. டிஎஸ்டிஇடி (TS-TET-2022 ) தேர்வு ஜூன் 12, 2022 அன்று நடைபெற உள்ளது.

தேர்வுக்கான அட்மிட் கார்டு ஜூன் 6, 2022 அன்று வெளியிடப்படும். தாள் 1 காலை 9:30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், தாள் II பிற்பகல் 2:30 முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெற உள்ளது. அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, டிஎஸ் டிஇடி 2022 க்கான முடிவுகள் ஜூன் 27 அன்று நடைபெற உள்ளது. நியமனத்திற்கான டிஇடி தகுதிச் சான்றிதழ்களின் செல்லுபடியாகும் காலம் வாழ்நாள் முழுவதும் ஆகும்.

also read : தேர்வு இல்லை, 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அரசு வேலை, இன்றே விண்ணப்பியுங்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 12

விண்ணப்பிக்க: tstet.cgg.gov.in

வடகிழக்கு ரயில்வே:

வடகிழக்கு ரயில்வே விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பல பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. மார்ச் 26 ஆம் தேதி காலை 11 மணி முதல் பதிவு செயல்முறை தொடங்கியது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 25

விண்ணப்பிக்க: ner.indianrailways.gov.in

எச்பிபிஎஸ்சி உதவி பொறியாளர் ஆட்சேர்ப்பு:

இமாச்சல பிரதேச பொது சேவை ஆணையம் (HPPSC) உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இமாச்சல பிரதேச பொது சேவை ஆணையத்தில் காலியாக உள்ள 76 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 12

விண்ணப்பிக்க: hppsc.hp.gov.in

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Job, UPSC