சி.ஆர்.பி.எப், சி.ஐ.எஸ்.எப் உள்ளிட்ட மத்திய பாதுகாப்பு படைகளில் வேலை!

உடற்தகுதி மற்றும் எழுத்து தேர்வு மூலம் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

news18
Updated: April 24, 2019, 4:38 PM IST
சி.ஆர்.பி.எப், சி.ஐ.எஸ்.எப் உள்ளிட்ட மத்திய பாதுகாப்பு படைகளில் வேலை!
மாதிரிப்படம்
news18
Updated: April 24, 2019, 4:38 PM IST
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சி.ஆர்.பி.எப், சி.ஐ.எஸ்.எப், இந்தோ - திபெத் படை, எஸ்.எஸ்.பி ஆகிய பாதுகாப்பு படைகளில் காலியாக உள்ள 323 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சி.ஆர்.பி.எப், சி.ஐ.எஸ்.எப், இந்தோ - திபெத் படை, எஸ்.எஸ்.பி ஆகிய பாதுகாப்பு படைகளில் காலியாக உள்ள 323 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யு.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் 2019 ஆகஸ்ட் 1-ம் தேதிப்படி 20 வயதுக்கு அதிகமானவர்களாகவும், 25 வயதுக்கு உள்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.


உடற்தகுதி மற்றும் எழுத்து தேர்வு மூலம் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவார்கள். upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். பட்டியலினத்தில் இருப்பவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு குறித்த அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்க...

Loading...

விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்க...

மேலும் செய்திகள்:

மத்திய அரசில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள்... 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?
வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  வேலைவாய்ப்பு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...