IES/ISS Examination E- Admit Card: 2022 ஆண்டுக்கான இந்திய பொருளாதார சேவைகள் (IES) மற்றும் இந்திய புள்ளியியல் சேவைகள் (ISS) தேர்வுக்கான அனுமதி நுழைவுச் சீட்டை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
24 ஐஇஎஸ், 29 ஐஎஸ்எஸ் என மொத்தம் 53 காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை யுபிஎஸ்சி முன்னதாக வெளியிட்டது. இதற்கான விண்ணப்பபங்கள் ஏப்ரல் 26 வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன.
இந்த தேர்வுகள் ஜூன் மாதம் 24, 25, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் அசல் அடையாள அட்டை எடுத்துவராத விண்ணப்பதாரர்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள்
www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பற்றிய தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போனில் குறுந்தகவல் மூலமாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவான விபரங்கள்: விண்ணப்பதாரர்கள் கைக்கடிகாரம், புத்தகங்கள், காகிதத் துண்டுகள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்கள் (செல்போன், ப்ளூடூத், ஹெட்போன், பேனா, உளவு கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், ஸ்டோரேஜ் டிவைஸ் உள்ளிட்டவை) தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படாது.
தடை செய்யப்பட்ட இந்தப் பொருட்களை யாராவது வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் விண்ணப்பம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது சட்ட / குற்றவியல் ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மூன்று முதல் ஏழு ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு:
INDIAN ECONOMIC SERVICE / INDIAN STATISTICAL SERVICE EXAMINATION, 2022 EAdmit Cardஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.