ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சுகாதாரத் துறை & தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் வேலை - UPSC அறிவிப்பு

சுகாதாரத் துறை & தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் வேலை - UPSC அறிவிப்பு

யூபிஎஸ்சி வேலைவாய்ப்பு

யூபிஎஸ்சி வேலைவாய்ப்பு

UPSC Recruitment : சுகாதாரம் & குடுப்ப நலத்துறை மற்றும் தடயவியல் அறிவியல் இயக்குநரகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசின் சுகாதாரம் & குடும்ப நல அமைச்சகத்தில் கீழ் செயல்படும் துறையில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதே போல் உள்துறை அமைச்சகத்திற்குக் கீழ் செயல்படும் தடயவியல் அறிவியல் இயக்குநரகத்தின், மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இப்பணிகளின் அறிவிப்பை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள் இதோ.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்துறைவயது
Specialist Grade III (Paediatrics)5சுகாதாரம் & குடுப்ப நலத்துறை40
Scientist ‘B’ (Neutron Activation Analysis)1மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகம்35

சம்பளம்:

Specialist Grade III பணிக்கு நிலை 11 படி ரூ.67,700 - 2,08,700 வரை வழங்கப்படும். Scientist ‘B’பணிக்கு நிலை 10 படி ரூ.56,100-1,77,500 வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

Specialist Grade III பணிக்கு MBBS தேர்ச்சி + டிப்ளமோ தேவை.

வேதியியல்/இயற்பியல்/தடயவியல் அறிவியல் போன்றவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகள் யூபிஎஸ்சி நேரடி நியமனம் என்பதால் விண்ணப்பதார்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும். மேலும் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் பொறுத்து நேர்காணல் மட்டும் நடத்தப்படலாம் அல்லது நேர்காணல் + தேர்வு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க.! - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் வேலைவாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் இப்பணிகளுக்கு https://www.upsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் மட்டும் விண்ணப்பிக்கவும். நேர்காணலுக்குச் செல்லும்போது விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து எடுத்துச் செல்ல வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.25/- ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

முக்கிய நாட்கள்:

நிகழ்வுகள்தேதிகள்
விண்ணப்பங்கள் தொடங்கப்பட்ட நாள்10.12.2022
விண்ணப்பிக்கக் கடைசி நாள்29.12.2022
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யக் கடைசி நாள்30.12.2022

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, UPSC