• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • UPSC 64 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ... ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

UPSC 64 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ... ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

 UPSC 64 காலிப்பணியிடங்கள்

UPSC 64 காலிப்பணியிடங்கள்

UPSC காலியாக உள்ள 64 பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 11.11.2021

  • Share this:
    ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அல்லது (UPSC), இந்திய அரசுப் பணிகளுக்கான தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு தனி அமைப்பாகும். இவ்வமைப்பு இந்திய அரசின் பல அரசுத் துறைகளின் பணிகளுக்கான பணியாளர்களுக்கான விண்ணப்பங்களைப் பெற்று அவர்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேரடித் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்து கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.

    இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வெளிநாட்டுப் பணி போன்ற பணிச்சேவைகளை ஒழுங்குபடுத்தி அப்பணியாளர்களின் பணிக்கால வாழ்வு, பயிற்சி மற்றும் சேவைவிதிகளை கட்டுப்படுத்தி வருகிறது. தற்போது UPSC காலியாக உள்ள 64 பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் UPSC
    வேலையின் பெயர் Assistant Professor, Assistant Defence Estates Officer, Senior Scientific Officer Grade-II , Assistant Director, Medical Officer
    காலிப்பணி இடங்கள் 64 காலிப்பணி இடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை Interview அல்லது Recruitment Test followed by Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
    வயது குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 11.11.2021
    கல்வி தகுதி

    அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் BE/ B.Tech/ M.Sc/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    அதனுடன் மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் 2 முதல் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் Level 7 முதல் அதிகபட்சம் Level 10 in the Pay Matrix as per 7th CPC அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் SC/ST - கட்டணம் கிடையாது
    Others - ரூ.25/-

    இணையதள முகவரி https://www.upsc.gov.in/ இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-15-2021-engl-221021.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: