ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி... நாளை மறுநாள் நுழைவுத்தேர்வு

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி... நாளை மறுநாள் நுழைவுத்தேர்வு

நுழைவுத் தேர்வு

நுழைவுத் தேர்வு

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு அனுமதிச் சீட்டினை, www.civilservicecoaching.com  என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  2023  ஆண்டு  ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி முதல்நிலை பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு (Entrance exam for free UPSC Prelims) நாளை மறுநாள் நடைபெறுகிறது. எனவே, இத்தேர்வுக்கு, விண்ணப்பித்த மாணவர்கள் உடனடியாக அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  தமிழ்நாடு அரசின் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் (All India Civil Service Coaching Centre) ஆண்டுதோறும் யுபிஎஸ்சி சிவில் சர்விஸ் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சியினை வழங்கிவருகிறது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

  அந்த வகையில், 2023ம் ஆண்டுக்கான குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வு வரும் மே மாதம் 23ம் தேதி நடைபெறும் என்று யுபிஎஸ்சி தெரிவித்தது.  இதனையடுத்து, சென்னை அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி  மையத்திலும், கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்திலும்  மாணவர்களுக்கு  முதல்நிலைத் தேர்வுக்கு  பயிற்சித் திட்டம் அறிவிக்கப்பட்டது.  பயிற்சிக் காலங்களில்  கட்டணமில்லாமல் தங்கும் வசதி,  தரமான உணவு ஆகியவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நுழைவுத் தேர்வின் மூலமாக இந்த பயிற்சி வகுப்புக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்ற்னர்.

  தேர்வின் தன்மை: 150 கொள்குறி வினாக்களுக்கு விடையளிக்கப்பட வேண்டும்.

  தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்: தேர்வு 13.11.2022 அன்று ( ஞாயிற்றுக் கிழமை ) காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை இரண்டரை மணி நேரம் நடைபெறுகிறது.

  இதையும் வாசிக்க: தொழில் முனைவோருக்கு 5 நாள் சிறப்பு பயிற்சி: இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

  தேர்வு மையங்கள்: பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், தேர்வு மையங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

  நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு அனுமதிச் சீட்டினை, www.civilservicecoaching.com  என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து தேர்வு மையத்தை தெரிந்து கொள்ளலாம்.

  இந்தாண்டு  பயிற்சி வகுப்புக்கு மட்டும் 7000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வு, நாளை மறுநாள் (13-11-2022) தமிழ்நாட்டில் உள்ள 17 மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. 

  மேலும், அவ்வப்போது அறிவிக்கப்படும் விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்திலும், தொலைபேசி எண். 044 – 24621475, அலைபேசி எண். 94442 86657 ஆகிய எண்களையும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

  அனுமதிச் சீட்டை பதவிறக்கம் செய்ய: UPSC Preliminary 2023 - Entrance exam for free Coaching - Hall Ticket Download

  UPSC 2023 Preliminary Examination

  Published by:Salanraj R
  First published:

  Tags: UPSC