UPSC NDA Exam 2022: தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி 2022 எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணயைம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள்:
தேசிய பாதுகாப்பு அகாடமி |
ராணுவம் - 208 (மகளிர் 10)
கடற்படை - 42 (மகளிர் 03)
விமான படை -120 (மகளிர் - 06) |
இந்திய கடற்படை அகாடமி |
30 (ஆண்கள் மட்டும் ) |
|
|
மொத்தம் |
400 |
பதவியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது, நிர்வாக காரணங்களால் அதிகரிக்கவோ, குறையவோ கூடும்.
யார் விண்ணப்பிக்கலாம்: திருமணமாகாத ஆண்/பெண் இந்திய குடிமக்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: 2004 ஜனவரி 2 பின்பாக பிறந்தவர்கள் மற்றும் 2007, ஜனவரி 1 முன்பாக பிறந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கல்வித் தகுதி: 10+2 கல்வி முறையில் அல்லது இதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள்: அறிவிக்கை வெளியான நாள்: 18.05.2022 ;
விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான
கடைசி நாள் : ஜுன் 7 மாலை 6 மணி வரை;
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம்: 14.06.2022 முதல் 20.06.2022 மாலை 6 மணி வரை;
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: முகக் கவசம் கட்டாயமா... பாலசந்திரன் விளக்கம்
விண்ணப்பம் செய்வது எப்படி:
விண்ணப்பதாரர்கள், upsconline.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் ஆதார் எண், ஓட்டுநர் உரிமம், பான் எண், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை , மாணவர் அடையாள அட்டை என மத்திய மாநில அரசுகள் வழங்கிய அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வு மற்றும் நேர்காணலின் போது, பதிவேற்றம் செய்த அடையாள ஆவணத்தின் அசலை எடுத்துச் செல்ல வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மகளிர்/ முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . ஆகவே, பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தெரிவு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முடிவுகள் வெளியான 2 வாரத்துக்குள், இந்திய ராணுவத்தின் இணையதளத்தில் joinindianarmy.nic.in பதிவு செய்ய வேண்டும். அதன்பின்பு வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணலுக்கான தேர்வு மையம் மற்றும் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும்.
நேர்காணலின் போது அசல் சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்திய ஐடி நிறுவனங்களில் 5 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கம்!
தெளிவுரை வேண்டுவோர்: மேலும் தகவல்களுக்கு, யுபிஎஸ்சி ‘சி’ நுழைவு வாயில் அருகேயுள்ள உதவி மையத்தை நேரடியாகவும், 011-23385271/011-23381125 / 011-23098543 என்ற போன் எண்களிலும், வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
NATIONAL DEFENCE ACADEMY & NAVAL ACADEMY EXAMINATION (II), 2022இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.