யுபிஎஸ்சி மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கேற்க முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய தேர்வர்களுக்கு பயனளிக்கும் வகையில், இப்பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இப்பயிற்சி மையத்தில் 2021-2022-ஆம் ஆண்டில் முதன்மைத் தேர்வுக்கு பயின்ற மொத்தம் 80 தேர்வர்களில், 12 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: SBI recruitment 2022 : எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி ?
இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளரும் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில் 2021-2022-ஆம் ஆண்டில் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கு பயின்ற 80 தேர்வர்களில் 12 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு பயிற்சி மையத்தின் மூலம் மாதிரி ஆளுமை தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 விண்ணப்பம்: இந்த தவறுகளை செய்யாதீர்கள்
அவர்களுடன் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் பங்கு பெறலாம். கட்டணம் எதுவும் இல்லை. இத்தேர்வில் பங்கு பெற aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி, 9444286657 என்ற வாட்ஸ் அப் எண், 044 24621909 என்ற தொலைப்பேசி எண் மூலமாக தங்கள் விருப்பதை தெரிவிக்கலாம். மாதிரி ஆளுமைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரங்கள் இம்மையத்தின் www.civilservicecoaching.comஎன்ற இணைய தளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.