யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும் நேர்முக தேர்வுக்கான முக்கிய அறிவிப்பையும் தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகள் தொடக்கம்/முதன்மை மற்றும் நேர்காணல் என்று மூன்று அடுக்குகளில் நடக்கும். நாட்டின் முக்கிய பதவிகளுக்கான தேர்வாக சிவில் சர்வீஸ் தேர்வுகள் விளங்குகின்றது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில் சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் தேர்வானவர்களுக்கு நேர்காணல் அடுத்த வருடம் தொடக்கத்தில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தேர்வு முடிவுகள் வெளியானதும், தேர்வர்கள் கண்டிப்பாக UPSC இணையத்தளத்தில் வெளியிடப்படும் Detailed Application Form-II (DAF-II) என்ற படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
DAF-II குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு மட்டுமே இணையத்தளத்தில் இருக்கும். அதனை தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பூர்த்தி செய்ய வேண்டும். அப்படி பூர்த்தி செய்யத் தவறினால் படிவம் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, நேர்காணலுக்குத் தேவையான சான்றிதழ்களில் விவரங்களையும் வரிசைப்படுத்தியுள்ளனர்.
அறிவிப்பை காண : UPSC அறிவிப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Exam results, UPSC