மத்திய விமான போக்குவரத்து துறையில் Air Safety Officer வேலை

ஏரோனாடிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய விமான போக்குவரத்து துறையில் Air Safety Officer வேலை
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: December 10, 2018, 6:23 PM IST
  • Share this:
மத்திய விமான போக்குவரத்து துறையின் கீழ் வரும் ஏர் சேஃப்டி ஆபிசர் பிரிவில் காலியாக இருக்கும் 16 இடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி.) நடத்தவுள்ளது.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: ஏரோனாடிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ. 25.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 13. தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு http://www.upsc.gov.in/sites/default/files/AdvtNo-21-2018-Engl.pdf என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.Also watch Video:

First published: December 10, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading