மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF), எல்லை பாதுகாப்புப் படை (BSF), இந்தோ - திபெத்திய எல்லைக் காவல்படை, மத்திய தொழிலக காவல் படை (CISF), சிறப்பு சேவை பணியகம் (SSB ) ஆகிய ஆயுத காவல்படைகளில் உள்ள உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான தேர்வை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. அதன்படி, 2022 ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: 253
- எல்லை பாதுகாப்பு படை: 66
- மத்திய ரிசர்வ் காவல்படை : 299
- மத்திய தொழிலக காவல் படை : 62
- சிறப்பு சேவை பணியகம் : 82
- இந்தோ - திபெத்திய எல்லைக் காவல்படை : 14
முக்கியமான நாட்கள்:
ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள் : 20/04/2022
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 10/05/2022, மாலை 6 மணி
சமர்பிக்கப்பட்ட விண்ணப்பபங்களை திரும்ப பெறுவதற்கான வசதி : மே மாதம் 1 7 முதல் 23ம் தேதி வரை
எழுத்துத் தேர்வு: 2022 ஆகஸ்ட் 7ம் தேதி
வயது வரம்பு: 01/08/2022 அன்றுள்ளபடி, குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2/08/1997 க்குப் பின்பு பிறந்தவர்களும், 1/08/2002-க்கு முன்பு பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் ஐந்து ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.
இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் மூன்று ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்,
முன்னாள் இராணுவத்தினருக்கு, மத்திய அரசுப் பணியாளர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பில் இருந்து அதிகபட்சமாக ஐந்து ஆண்டிகள் வரை வயது வரம்பு சலுகை உண்டு.
கல்வித் தகுதி: பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்கள் / பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர் கட்டணச் சலுகை பெற தகுதியுடைவர்கள்.
ஏனைய தேர்வர்கள் அனைவரும், இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, ரூ.200 தேர்வுக் கட்டணத்தை கட்டாயாமாக செலுத்த வேண்டும். எஸ்பிஐ வங்கிக் கிளையின் மூலமாகவோ அல்லது ரூபே/விசா/ மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்.
upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பக்க வேண்டும்.
CENTRAL ARMED POLICE FORCES (ASSISTANT COMMANDANTS) EXAMINATION, 2022
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், உடல் தகுதி தேர்வு, மற்றும் மருத்துவ தகுதி தேர்வுகளில் தகுதி பெற வேண்டும். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.