முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / UPSC Vice- Principal: 131 துணை முதல்வர் காலியிடங்கள், முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

UPSC Vice- Principal: 131 துணை முதல்வர் காலியிடங்கள், முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

யுபிஎஸ்சி

யுபிஎஸ்சி

https://upsconline.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 16.06.2022. ஆகும்.   

  • 1-MIN READ
  • Last Updated :

தேசிய தலைநகர் டெல்லி பிரதேச அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பள்ளிகளில் துணை முதல்வர் (Vice Principal) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 131

இடஒதுக்கீடு அற்ற இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் கண்ட சாதிகள் பட்டியல் கண்ட பழங்குடியினர்  நிர்ணயிக்கப்பட்ட        மாற்றுத்தியனாளிகள்  மொத்தம் 
5611362175131

பின்குறிப்பு: டெல்லி அரசால் வழங்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓபிசி) சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படும். இதர மாநிலங்களைச் சேர்ந்த ஓபிசி சான்றிதழ்கள் பொதுப் பிரிவுக்கான ஆவணமாக  கருதப்படும்.

யார் விண்ணப்பிக்கலாம்:

இந்திய குடிமக்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்விக்கான தகுதி: 

அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்; அங்கீகரிக்கபட்ட கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் கல்வி பட்டம் முடித்திருக்க வேண்டும்.

பணி முன் அனுபவம்: இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், குறைந்தது இரண்டு ஆண்டுகள் முதுநிலை ஆசிரியராக பணி செய்திருக்க வேண்டும் (அல்லது) இரண்டு ஆண்டுகள் பட்டதாரி ஆசிரியராக பணி செய்திருக்க வேண்டும்.

பணிக்காலம் நிரந்தரமானது.

சம்பளம்:  7வது சம்பளக்குழு ஆணை கணக்கு எண் 10-யின் படி சம்பளம் வழங்கப்படும் ( Level- 10 in the Pay Matrix as per 7th CPC ., Rs.56,100 – 1,77, 500).

வயதுக்கான தகுதி: 

விண்ணப்பபங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாளன்று, விண்ணப்பதாரரின் வயது 35-க்கு மேல் இருக்கக் கூடாது. இருந்தாலும்,

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர்  மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம்.

விண்ணப்பிக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக்  கட்டணம் ரூ.25 ஆகும்.

பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மகளிர் ஆகிய பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

https://upsconline.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 16.06.2022. ஆகும்.

விண்ணப்பங்களில் சமர்பிக்கப்பட்ட விபரங்கள் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு விண்ணப்பித்தார்கள் நேர்காணலுக்கு வரவழைக்கப்படுவர்.

First published:

Tags: UPSC