தவறான தகவல்கள் அளித்து தேர்ச்சி பெற்ற 55 கிரீமி லேயர் ஓபிசி விண்ணப்பதாரர்கள் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் போன்ற மத்தியப் பணிகளுக்கு பரிந்துரைக்கப்பட வில்லை என்று சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் தெரிவித்தது.
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்விஸ் பதவிகளுக்கும், குரூப் ஏ,பி மத்தியப் பணிகளுக்கும் மத்திய அரசு தேர்வாணையம்(யுபிஎஸ்சி) எழுத்துத் தேர்வு நடத்தி வருகிறது. இதில் முதன்மை மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், இடவாரி ஒதுக்கீட்டு அடிப்படையிலும் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். யுபிஎஸ்சி பரிந்துரை அடிப்படையில் மத்திய பணியாளர் நலன் அமைச்சகம் விண்ணப்பதாரர்களை நியமனம் செய்கிறது.
இந்த நேரடி ஆட்சேர்ப்பில், பட்டியல் கண்ட சாதிகள் பிரிவினருக்கு 15 சதவீதமும், பட்டியல் கண்ட பழங்குடியினர் பிரிவினருக்கு 7.5 சதவீதமும், சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு 27 சதவீதமும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. ஒபிசி பிரிவினரில் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்திற்கும் மேலுள்ளவர்கள் பொருளாதார ரீதியாக மேம்பட்டவர்கள் என்று எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். இவர்கள், இடஒதுக்கீட்டு சலுகையைப் பெற தகுதியற்றவர்கள் ஆகின்றனர்.
மேலும், எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி இடஒதுக்கீட்டு பிரிவின் கீழ் வராதவர்கள் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மேம்பட்ட ஓபிசி வகுப்பினருரை தீர்மானிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்தும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பயனாளிகளை தீர்மானிப்பதற்கான நிபந்தனைகள் குறித்தும் மாநிலங்களையில் ராம் நாத் தாக்கூர் (பீகார் ஜனதா தள் உறுப்பினர்கள்) கேள்வி ஒன்றை எழுப்பினார்.
இதையும் வாசிக்க: TNEA 2022: பொறியியல் மாணவர் சேர்க்கையில் புதிய மாற்றங்கள்
இந்த கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்த சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் ," 13.09.2017 தேதியிட்ட உத்தரவின் படி, ஓபிசி வகுப்பினரில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு அதிகம் உள்ளவர்கள் மேம்பட்ட நிலையில் உள்ளவர்களாக (கிரீமி லேயர்) தீர்மானிக்கப்படுகின்றனர்.
சிவில் சர்விஸ் எழுத்துத் தேர்வு - 2016 | நிராகரிக்கப்பட்ட மாணவர்கள் - 11 |
2017 | 27 |
2018 | 7 |
2019 | 7 |
2020 | 3 |
மொத்தம் | 55 |
மேலும், மத்திய நலன் பணியாளர் நலன் அமைச்சகம் அளித்த தரவுகளின் படி, கிரீமி லேயர் அற்றவர் என்ற தவறான தகவல்கள் அளித்து யூபிஎஸ்சி எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, பின்னர் மேற்கொண்ட மெய்த்தன்மை சரிபார்ப்பினால் கிரீமி லேயர் என கண்டறியப்பட்ட 55 ஓபிசி விண்ணப்பதாரர்கள் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் போன்ற மத்தியப் பணிகளுக்கு பரிந்துரைக்கப்பட வில்லை" என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: UPSC