EPFO Jobs | தொழிலாளர் வைப்புநிதி கழகத்தில் வேலை - கல்வித்தகுதி, சம்பளம் உள்ளிட்ட விபரங்கள்...!

UPSC EPFO Recruitment 2020 |

EPFO Jobs | தொழிலாளர் வைப்புநிதி கழகத்தில் வேலை - கல்வித்தகுதி, சம்பளம் உள்ளிட்ட விபரங்கள்...!
News18
  • News18
  • Last Updated: January 11, 2020, 2:15 PM IST
  • Share this:
தொழிலாளர் வைப்புநிதி கழகத்தில் 421 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

EPFO எனப்படும் தொழிலாளர் வைப்புநிதி கழகம் மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கிவருகிறது. இந்த கழகத்தில் 421 அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்துத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், சட்டம், தொழில் மேலாண்மை ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் கூடுதல் தகுதி பெற்றவர்களாக கருதப்படுகின்றனர். 30 வயதுக்கு உள்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர்.


தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு நிர்ணயித்துள்ள 8-வது நிலையிலான ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணமாக பொது மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரூ.25 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

மேற்கண்ட தகுதிகள் உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் upsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அறிவிக்கையை பார்க்க கிளிக் செய்க...| விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்க...




மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: January 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading