ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

UPSC வேலைவாய்ப்பு : தேசிய ஆவணக் காப்பகத்தில் நிரந்தர வேலை.. ரூ.1,51,100 வரை சம்பளம்..

UPSC வேலைவாய்ப்பு : தேசிய ஆவணக் காப்பகத்தில் நிரந்தர வேலை.. ரூ.1,51,100 வரை சம்பளம்..

தேசிய ஆவணக் காப்பகம்

தேசிய ஆவணக் காப்பகம்

UPSC Direct Recruitment : தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தேசிய ஆவணக் காப்பகம் பண்பாட்டு அமைச்சகத்திற்குக் கீழ் செயல்படுகிறது. இத்துறையில் உள்ள காப்பக நிபுணர் காலிப்பணியிடங்களுக்கான நிரந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள் கீழ் வருமாறு.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்
காப்பக நிபுணர்(Archivist)13

வயது வரம்பு:

மத்திய அரசின் இந்த பணிக்கு வயது வரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

குரூப் - பி பிரிவில் இடம்பெறும் இப்பணிக்கு 7வது சிபிசி நிலை 8 படி ரூ. 47,600 முதல் தொடங்கி ரூ.1,51,100 வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

இந்திய நவீனக் கால வரலாறு இடம்பெற்றுள்ள முதுகலை வரலாறு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

காப்பகம் மற்றும் பதிவுகள் மேனேஜ்மட் பாடத்தில் டிப்ளமோ அல்லது 2/3 வருடக் காப்பகம் சார்ந்த வேலை அனுபவம் அல்லது 2/3 வருட ஆராய்ச்சி அல்லது நவீனக் கால வரலாறு 2/3வருடக் கற்பித்தல் அனுபவம் தேவை.

குறிப்பு :

அனுபவங்கள் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்திற்கு ஏதுவாக மாற்றி அமைக்கப்படும். தகுந்த கல்வித்தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். எதிர்பார்க்கும் தகுதிகள் கூடுதல் சிறப்பை தரும்.

தேர்வு செய்யும் முறை:

இப்பணிகள் யூபிஎஸ்சி நேரடி நியமனம் என்பதால் விண்ணப்பதார்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும். மேலும் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் பொருத்து நேர்காணல் மட்டும் நடத்தப்படலாம் அல்லது நேர்காணல் + தேர்வு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் இப்பணிகளுக்கு https://www.upsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் மட்டும் விண்ணப்பிக்கவும். நேர்காணலுக்குச் செல்லும் போது விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து எடுத்துச் செல்ல வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.25/- ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

Also Read : தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா? - அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

முக்கிய நாட்கள்:

நிகழ்வுகள்தேதிகள்
விண்ணப்பங்கள் தொடங்கப்பட்ட நாள் 10.12.2022
விண்ணப்பிக்கக் கடைசி நாள்29.12.2022
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யக் கடைசி நாள்30.12.2022

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, Job Vacancy, UPSC