UPSC CSDS Exam 2022: முப்படைகளின் அதிகாரிகள் பதவிக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு 2022 (CSDS Examination), தேர்வுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
காலியிடங்கள்: 339
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:https://upsconline.nic.in/
முக்கியமான நாட்கள்:
அறிவிக்கை வெளியான நாள்: 18.05.2022 ;
விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கடைசி நாள் : ஜுன் 7 மாலை 6 மணி வரை;
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம்: 14.06.2022 முதல் 20.06.2022 மாலை 6 மணி வரை;
எழுத்துத் தேர்வு: 04/09/2022
காலிப்பணியிடங்கள்:
முப்படை சேவைகள் | காலியிடங்கள் |
டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி மையம் | 100 |
கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படைப் பயிற்சி மையம் | 22 |
ஐதராபாதில் உள்ள விமானப்படை பயிற்சி மையம் (பறக்கும் பயிற்சிக்கு முந்தைய பயிற்சி) | 32 |
சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் (ஆண்களுக்கான 118-வது குறுகிய கால ஆணைய பயிற்சி) | 169 |
சென்னையில் 32-வது குறுகிய கால ஆணைய (தொழில்நுட்பம் சாராத) (பெண்களுக்கான) பயிற்சி | 16 |
மொத்தம் | 339 |
திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பதிவிக்கும் ஏற்ப வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, இந்திய ராணுவ பயிற்சிக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் 1999 ஜுலை 2ம் தேதிக்குப் பிறகும், 2004, ஜுலை 1ம் தேதிக்கு முன்பாகவும் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
இந்திய ராணுவ பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்திய கடற்படைப் பயிற்சி மையத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட உயர்க் கல்வி நிறுவனங்களில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விமானப்படை பயிற்சி மையத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் 10+2 கல்வி முறையில் அல்லது இதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.200ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மகளிர்/ முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . ஆகவே, பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.200 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி: விண்ணப்பதாரர்கள், upsconline.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
COMBINED DEFENCE SERVICES EXAMINATION (II), 2022
[INCLUDING SSC WOMEN (NON-TECHNICAL) COURSE]
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: UPSC