Home /News /employment /

SHRUTI SHARMA: யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பெற்ற சுருதி சர்மா... முதல் 4 இடங்களையும் பெண்கள் பிடித்தனர்

SHRUTI SHARMA: யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பெற்ற சுருதி சர்மா... முதல் 4 இடங்களையும் பெண்கள் பிடித்தனர்

சுருதி சர்மா

சுருதி சர்மா

UPSC EXAM RESULT: 75வது சுதந்திரத் திருநாள் அமிர்தப் பெருவிழாவை நாம் கொண்டாடி வரும் தருவாயில், நிர்வாக பணியை மேற் கொள்ள தேர்ச்சி பெற்றுள்ளீர்கள் -பிரதமர் மோடி

    நடந்து முடிந்த யுபிஎஸ்சி சிவில் சர்விஸ் தேர்வில் (2021), முதல் நான்கு இடங்களையும் பெண்கள் பெற்றுள்ளனர். நாட்டின் முதல் மாணவியாக சுருதி சர்மா தேர்ச்சிப் பெற்றுள்ளார்.

    யுபிஎஸ்சி சிவில் சர்வீஸஸ் 2021 தேர்ச்சி பெற்றவர்களின் இறுதி பட்டியல் இன்று வெளியானது. இறுதிப் பட்டியலில் 685 பேரை யுபிஎஸ்சி பரிந்துரைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட மிகக் குறைவானதாகும்.

    சிவில் சர்விஸ் தேர்வில் பெண்கள் அதிகளவில் தேர்ச்சி  பெற்று வருகின்றனர். கடந்தாண்டு தேர்வில், முதல் 20 இடங்களில் 10 பெண்கள் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். இந்நிலையில், இந்த முறை முதல் நான்கு இடங்களையும் பெண்களே தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இது மிகவும் ஆரோக்கியமானதாக  பார்க்கப்படுகிறது. தேசிய அளவில் முதல் இடத்தை சுருதி சர்மா பிடித்துள்ளார்.

    சுருதி சர்மா: 

    செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி ஆவார். ஜாமியா மில்லியா இஸ்லாமியா உண்டு உறைவிட பயிற்சி மையத்தில் ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்றுள்ளார். தனது வெற்றியில், ஜாமியா மில்லியா பயிற்சி மையம் முக்கிய பங்கு வகித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

     



    அன்கிதா அகர்வால், காமினி சிங்லா, ஐஸ்வர்யா வெர்மா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப்  பிடித்துள்ளனர்.



    பிரதமர் மோடி வாழ்த்து:

     



    குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். "75வது சுதந்திரத் திருநாள் அமிர்தப் பெருவிழாவை நாம் கொண்டாடி வரும் தருவாயில், நிர்வாக பணியை மேற்கொள்ள தேர்ச்சி பெற்றுள்ளீர்கள்"  என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துப் பதிவில் தெரிவித்துள்ளார்.

    கடந்த பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் முதன்மை (Mains Examination) தேர்வு, ஏப்ரல் முதல் மே வரையில் நடத்திய நேர்முகத் தேர்வு (Personality Interview) அடிப்படையில் இந்த இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுளளது. ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் மத்தியப் பணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி பணிகளுக்கு மொத்தம் 685 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

    126 பேர்இருப்புப் பட்டியலில் (Reserved Candidates) வைக்கப்பட்டுள்ளனர் (சிவில் சர்வீஸ் தேர்வு விதிகள் எண் -16 (4) & (5)_க்கு இணங்க). இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பொதுப் பட்டியலில் தேர்வாகி, பதவிகளைத் தேர்வு செய்யும் பட்சத்தில், காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த பட்டியல் பராமரிக்கப்படுகிறது. 80 பேர் இரண்டாவது இருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: UPSC

    அடுத்த செய்தி