Home /News /employment /

மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் : தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியானது

மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் : தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியானது

காட்சிப் படம்

காட்சிப் படம்

இரண்டு தாள்கள் கொண்ட எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்காணல் தேர்வு ஆகிய மூன்று நிலைகள் மூலம் நியமனங்கள் நடைபெறும்

    UPSC CENTRAL ARMED POLICE FORCES EXAMINATION 2022: மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு அனுமதி நுழைவுச் சீட்டை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF), எல்லை பாதுகாப்புப் படை (BSF), இந்தோ - திபெத்திய எல்லைக் காவல்படை, மத்திய தொழிலக காவல் படை (CISF), சிறப்பு சேவை பணியகம் (SSB ) ஆகிய ஆயுத காவல்படைகளில் உள்ள உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான தேர்வை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. அதன்படி, 2022 ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 253 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    இரண்டு தாள்கள் கொண்ட எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்காணல் தேர்வு ஆகிய மூன்று நிலைகள் மூலம் நியமனங்கள் நடைபெறும். ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் நிலையில், அதற்கான அனுமதி நுழைவுச் சீட்டை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

    இதையும் வாசிக்கCUET UG: தேர்வு மையத்தை அடைய முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு: தேசிய தேர்வு முகமை

    நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? 

    upsconline.nic.in என்ற இணையப் பக்கத்தில் அனுமதிச்ச சீட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுளளது. விண்ணப்பப்  பதிவெண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பித்து பதவிறக்கம்  செய்து  கொள்ளலாம். அனுமதிச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தையும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டும். 

    கைக்கெடிகாரங்கள், புத்தகங்கள், காகித துண்டுகள், எலக்ட்ரானிக் பொருட்கள், ஹெட் போன்கள். மற்றும் ப்ளூடூத் கருவிகள், பேனா கேமிராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், சேமிப்பு கருவிகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை, தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது.

    நுழைவுச்சீட்டு மற்றும் அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ள அசல் அடையாள அட்டை இன்றி விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆகையால், அனைத்து விண்ணப்பதாரர்களும், தங்களின் நுழைவுச் சீட்டை தவறாமல் பதிவிறக்கம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    UPSC CENTRAL ARMED POLICE FORCES EXAMINATION 2022 EAdmit Card Released download at upsconline
    Published by:Salanraj R
    First published:

    Tags: UPSC

    அடுத்த செய்தி