Job Alert : பாதுகாப்பு படையில் 339 காலியிடங்கள் ... விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

பாதுகாப்பு படையில் 339 காலியிடங்கள்

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

  • Share this:
    பாதுகாப்பு படையில் காலிப்பணியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    காலியிடம்: இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் 100, இந்திய கப்பல் அகாடமி 22, விமானப்படை அகாடமி, ஐதராபாத் 32, ஆபிசர் பயிற்சி அகாடமி (ஆண்), சென்னை 169, ஆபிசர் பயிற்சி அகாடமி (பெண் ), சென்னை 16 என மொத்தம் 339 இடங்கள் உள்ளன.

    வயது:  திருமணமாகாத ஆண்கள் ராணுவம், கப்பல்படைக்கு 2.7.1998 -1.7.2003க்குள்ளும், விமான படைக்கு 2.7.1998-1.7.2002க்குள்ளும், ஆபிசர் பயிற்சி அகாடமிக்கு (திருமணமாகாத ஆண், பெண்) 2.7.1996 - 1.7.2002க்குள் இருக்க வேண்டும்.

    கல்வித்தகுதி: ராணுவ அகாடமி மற்றும் ஆபிசர் பயிற்சி அகாடமிக்கு பட்டப்படிப்பு, கப்பல்படை அகாடமிக்கு இன்ஜினியரிங், விமானப்படைக்கு பட்டப்படிப்பு (பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல்) அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

    தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

    தேர்வு மையம்: சென்னை, மதுரை,கோவை , திருச்சி, வேலூர்

    விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

    விண்ணப்பக்கட்டணம்: ரூ.200. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

    கடைசிநாள்: 24.08.2021 மாலை 6 மணி.

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள ஆன்லைனில் வெளியான அறிவிப்பை காண https://www.upsc.gov.in/sites/default/files/Notif-CDS-%20II-2021engl-040821.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: