ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

வெளியானது யுபிஎஸ்சி சிடிஎஸ்-II தேர்வு முடிவுகள்..!

வெளியானது யுபிஎஸ்சி சிடிஎஸ்-II தேர்வு முடிவுகள்..!

காட்சிப் படம்

காட்சிப் படம்

தேர்வாணையத்தின் upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வில் (II) நேர்காணலுக்கு தேர்ச்சி பெற்ற 6,658 விண்ணப்பதாரர்கள் பெயர் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் (upsc) வெளியிட்டுள்ளது.

  டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி மையம் , கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படைப் பயிற்சி மையம், ஐதராபாதில் உள்ள விமானப்படை பயிற்சி மையம் (பறக்கும் பயிற்சிக்கு முந்தைய பயிற்சி), சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் (ஆண்களுக்கான 118-வது குறுகிய கால ஆணைய பயிற்சி), சென்னையில்  பெண்களுக்கான 32-வது குறுகிய கால ஆணைய (தொழில்நுட்பம் சாராத) பயிற்சிகளில் சேர்வதற்கான  ஆட்சேர்ப்பு அறிவிப்பை யுபிஎஸ்சி கடந்த மே மாதம் 18ம் தேதி வெளியிட்டது. பொதுவாக, ஏப்ரல், செப்டம்பர் என ஆண்டுக்கு இரண்டு மாதங்களில் (CDS I & II) இத்தேர்வு நடத்தப்படுகிறது.

  2022 செப்டம்பர் 4 அன்று நடத்திய எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், நேர்காணலுக்குத் தகுதி பெற்ற 6658 விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியலை யுபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. நேர்காணல் தேர்வு, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைத் தேர்வு வாரியத்தால் (service selection board) நடத்தப்படும்.

  இதையும் வாசிக்கடிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயராகுவது எப்படி? 10 முக்கிய டிப்ஸ்கள் இங்கே

  தேர்வாணையத்தின் upsc.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்காணலின்போது வயது (பிறந்த தேதி), கல்வித் தகுதிகள், என்சிசி (சி) (இராணுவப் பிரிவு/சீனியர் டிவிஷன் ஏர் விங்/நேவல் விங்) போன்றவற்றிற்கான அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Written Result of Combined Defence Services Examination (II)-2022

  மேலும், விவரங்களுக்கு, தேர்வு ஆணையத்தின்  011-23385271, 011-23381125 and 011-23098543 என்ற உதவி மைய எண்களை அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: UPSC