2023ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் பிரிலிம்ஸ்:
2023ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு (பிரிலிம்ஸ்) தொடர்பான அறிவிப்பு 01.02.2023 அன்று வெளியிடப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்- 21.02.2023 .
முதல்நிலை எழுத்துத் தேர்வு (Civil Service Preliminary Examination, 2023) நடைபெறும் தேதி - 28.05.2023
முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.09.2023 (ஐந்து நாட்கள்)
வனத்துறை பணிகள் (முதன்மை) தேர்வு நடையேறும் தேதி: 26.11.2023 (பத்து நாட்கள்)
*குறிப்பு* : குடிமைப்பணிகளுக்கான (முதல் நிலை) தேர்வு முடிவின் அடிப்படையில் வனத்துறை பணிகள் (முதன்மை) தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.
தேசிய பாதுகாப்பு அகாடமி (I):
2023ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி, என்.டி.ஏ மற்றும் என்.ஏ (National DEfence Academy & Naval Academy) முதற்கட்ட தேர்வு தொடர்பான அறிவிப்பு 21.12.2022 அன்று வெளியிடப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்- 10.01.2023
முதற்கட்ட எழுத்துத் தேர்வு: 16.04.2023
முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 03.09.2023
ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (I)
2023ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி, சி.டி.ஏ (Combine Defence Service) முதற்கட்ட தேர்வு தொடர்பான அறிவிப்பு 21.12.2022 அன்று வெளியிடப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பபங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்- 10.01.2023
முதற்கட்ட எழுத்துத் தேர்வு: 16.04.2023
முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 03.09.2023
ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் (Combine MEdical Service ):
2023ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவை பணிகள் தேர்வு தொடர்பான அறிவிப்பு 19.04.2023 அன்று வெளியாகும். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்- 09.05.2023
தேர்வு தேதி நடைபெறும் தேதி: 16.07.2023
மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் (CAPF ACs):
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF), எல்லை பாதுகாப்புப் படை (BSF), இந்தோ - திபெத்திய எல்லைக் காவல்படை, மத்திய தொழிலக காவல் படை (CISF), சிறப்பு சேவை பணியகம் (SSB ) ஆகிய ஆயுத காவல்படைகளில் உள்ள உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான தேர்வை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது.
அதன்படி, 2023 ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு 26.04.2023 அன்று வெளியாகும். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்- 16.05.2023
தேர்வு தேதி நடைபெறும் தேதி: 06.08.2023
பொறியியல் சேவைகள் தேர்வு:
2023 ஆண்டுக்கான பொறியியல் சேவைகள் தேர்வுக்கான (Engineering Service) அறிவிப்பு 14.09.2022 அன்று வெளியாகும். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்- 04.10.2022
முதல்நிலை எழுத்துத் தேர்வு (Engineering Service Preliminary Examination) நடைபெறும் தேதி - 19.02.2023
முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.06.2023
மேலும், முழுவான விபரங்களை அறிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: UPSC