ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சென்னைப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி

சென்னைப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி

மாதிரி படம்

மாதிரி படம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 28.04.2022 . அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையத்தில் உதவி பேராசியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  காலிப்பணியிடங்கள் விவரம் 

  துறைகாலிப் பணியிடங்கள்
  Tamil1
  English2
  Economics1
  Political Science , Public Administration1
  Commerce1
  Pscycholoy2
  Computer Science1
  Management Studies2
  Music2
  French1
  Journalism2
  Sanskrit1
  saniva Siddhantha1
  Geography(B.Sc & M.Sc)2
  Sociology (BA & MA)2
  Christian Studies1

  கல்வித்தகுதி: தகுதி:  சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  தேசிய தகுதித் தேர்வு (NET) / மாநில தகுதித் தேர்வு (SET) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்காலிகமாக 120 நாட்களுக்கு (1 செமஸ்டர்) பணி வழங்கப்படும். இதற்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.

  வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், பதவிகளின் விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டது.  விண்ணப்பித்தார்களின் கல்வித் தகுதியின் அடிப்படையிலும், பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதலின் படியும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதன் அடிப்படையில் தகுதியான விண்ணப்பகார்களின் உத்தேசப் பட்டியல் வெளியிடப்படும்.

  விண்ணப்பம் செய்வது எப்படி?

  www.unom.ac.in/ என்ற சென்னை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ  வலைதளத்தில் பணிக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த விரிவான விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்து, உரிய சான்றிதழ்களுடன் (அசல் கல்வி சான்றிதழ் மற்றும் பணி சான்றிதழ்) உரிய வகையில் ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவுரைகளும் வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 28.04.2022 . அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி

  The Registrar,

  University of Madras,

  Chepauk,

  Chennai - 600 005

  ACIO/II Tech Examination: உதவி ரகசிய அதிகாரிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- 150 பணியிடங்கள்

  8-ம் வகுப்பு தேர்ச்சி போதும் - ரூ50,000 வரை சம்பளத்தில் கைமேல் வேலை

  தெளிவுரை வேண்டுவோர்:

  அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.unom.ac.in  இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Madras University