முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாதம்தோறும் உதவித் தொகை பெறலாம்... அரசின் இந்த திட்டம் உங்களுக்கு தெரியுமா?

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாதம்தோறும் உதவித் தொகை பெறலாம்... அரசின் இந்த திட்டம் உங்களுக்கு தெரியுமா?

காட்சிப் படம்

காட்சிப் படம்

இந்த உதவித்தொகை திட்டத்தில், 10,12, DEGREE முடித்த மாணவர்கள் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவகத்தில் தங்களை பதிவு செய்து பயனடையலாம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில், 15  வயதுக்கு மேற்பட்ட உழைக்கும் மக்களின் (Worker Age Population) எண்ணிக்கை 68% ஆகும். இதில், 58.6% சதவீதம் அளவிற்கு பணியாற்றி/அல்லது பணியைத் தேடி வருவதாக கூறப்படுகிறது. 14 வயது முதல் 18 வயதுடையவர்கள் ஆபத்தான (Hazardous occupation) வேலைகளில் ஈடுபடுத்துவதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. 15-29 வயது இளைஞர்களைப் பொறுத்த வரையில், 41.6%  சதவீதம் அளவிற்கும் மட்டுமே தற்போது இளைஞர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அதாவது, 1000 இளைஞர்களில் 416 பேர் மட்டுமே ஏதேனும் பணியில் உள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு முன்பு, மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.5 சதவீத அளவில் இருந்ததது. இது, பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான எண்ணிக்கை ஆகும். இருப்பினும், கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலங்களில் தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக பல்வேறு தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

உதரரணமாக, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர்  பிபெக் தெப்ராய் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், "  தமிழகத்தின் நகர்ப்புறங்களில் வாழும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை இரண்டு மடங்ககாக அதிகரித்தது என்றும், இதர கல்வியை விட  வேலையாயில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று, Centre for Monitoring Indian Economy என்ற ஆய்வு நிறுவனம் தனது அறிக்கையில், " 2020 ஏப்ரல் வாக்கில் தமிழகத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 49.8 சதவிகிதமாக அதிகரித்ததகவும், கொரோனா தொற்று முடக்க காலத்தில் இந்த எண்ணிக்கை தேசிய  சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம்" என்று தெரிவித்தது.

எனவே, நீங்களும் வேலாய்ப்பற்ற/வேலை தேடும் இளைஞராக இருந்தால் தமிழக அரசின்  வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத்திட்டத்திற்கு விண்ணப்பியுங்கள். இந்த திட்டம் கடந்த 2006 முதல் செயல்பட்டு வருகிறது.

இந்த உதவித் தொகை திட்டத்தின் கீழ் கீழ்கண்டவாறு நிதி உதவி வழங்கப்படுகிறது.

உதவித்தொகை
வ.எண்தேர்வுதொகை
1SSLC தோல்விரூ. 200/- மாதம்
2SSLC தோ்ச்சிரூ. 300/- மாதம்
3HSC தோ்ச்சிரூ.400/- மாதம்
4DEGREE தோ்ச்சிரூ.600/- மாதம்

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200/-, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300/-, மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400/- பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600/- என்ற வீதத்தில் ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் கணக்குகளில் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் வரவு வைக்கப்படுகிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் பதிவு செய்து, உயிர்ப் பதிவேட்டில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

ஐந்து ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு,  அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இவ்வுதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, DEGREE முடித்த மாணவர்கள் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவகத்தில் தங்களை பதிவு செய்து பயனடையலாம்.

இதையும் வாசிக்க:  TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியானது

இதர நிபந்தனைகள்:  இதற்கான தகுதியாக குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/ ஆகும்.

வயது வரம்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Unemployment