• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • முட்டைக்கோஸ்; ப்ரோக்கோலி பறிக்கும் வேலைக்கு ஆண்டுக்கு ரூ.63 லட்சம் சம்பளம்!

முட்டைக்கோஸ்; ப்ரோக்கோலி பறிக்கும் வேலைக்கு ஆண்டுக்கு ரூ.63 லட்சம் சம்பளம்!

ப்ரோக்கோலி பறிக்கும் வேலை

ப்ரோக்கோலி பறிக்கும் வேலை

மேலும் நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரங்களில் இந்த வேலைகளில் ஈடுபடும் தொழிலாளியின் சம்பளம் பீஸ் வொர்க் கணக்கை சார்ந்தது என்பது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதாவது ஒருவர் எத்தனை பீஸ் காய்கறிகளை நாளொன்றுக்கு பறிக்கிறாரோ, அதன் அடிப்படையில் தான் ஊதியம் வழங்கப்படும் என்பது இதன் பொருள்.

  • Share this:
காய்கறி பறிக்கும் பணியில் ஈடுபட நினைப்போருக்கு மிக அதிக ஊதியத்தில் அற்புதமான வேலை வாய்ப்பை வழங்க பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. ஐரோப்பாவின் பிரதான நிலப்பகுதியின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு யுனைடெட் கிங்டம் ஆஃப் கிரேட் பிரிட்டன். இங்குள்ள பெரிய பெரிய சூப்பர் மார்கெட்களுக்கு ஃபிரெஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்களை சப்ளை செய்யும் நிறுவனம் ஒன்று, தங்களிடம் காய்கறிகள் மற்றும் பழங்களை அறுவடை செய்யும் பணிக்கு சேரும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு சுமார் £62,000 (62,000 பவுண்ட்ஸ்) சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அதாவது 62,000 பவுண்ட்ஸ் என்பது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.63 லட்சம் ஆகும். ஊழியர்களின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் பழம் மற்றும் காய்கறி பறிப்பு வேலையில் ஈடுபடுவோருக்கு ஆண்டுக்கு ரூ.63 லட்சம் வழங்குவதாக டி எச் க்ளெமென்ட்ஸ் மற்றும் சன் லிமிடெட் (T H Clements and Son Ltd) என்ற அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மிகப்பெரிய சம்பளத்தை வழங்கும் வேலைகளுக்கான விளம்பரங்களை பழங்கள் மற்றும் காய்கறிகளை ஹோல்சேல் செய்யும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக இந்நிறுவனம் ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது. 2 தனித்தனி விளம்பரங்களில் வருடம் முழுவதும் வயலில் உள்ள முட்டைக்கோஸ் மற்றும் ப்ரோக்கோலிகளை பறிக்கும் வேலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பழம் மற்றும் காய்கறி எடுப்பவர்களை வேலைக்கு அமர்த்தும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு கீழ்கண்ட வீதத்தில் ஊதியம் செலுத்தப்படும்.

காய்கறிகளை பறிக்கும் வேலைகளில் ஈடுபடுவோருக்கு 1 மணி நேரத்திற்கு 30 பவுண்ட்ஸ் (ரூ.3000) வீதம் நாளொன்றுக்கு 240 பவுண்ட்ஸ் (ரூ.24,000) ஊதியமும், ஒரு வாரத்திற்கு (5 வேலை நாட்களுக்கு) 1200 பவுண்ட்ஸ் (ரூ.1,20,588) ஊதியமும், மாதம் அதாவது சுமார் 20 வேலை நாட்களுக்கு 4800 பவுண்ட்ஸ் (ரூ.4,82,425) மற்றும் ஆண்டுக்கு 62,400 பவுண்ட்ஸ் (தோராயமாக ரூ.62,71,526) ஊதியமும் வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தின் விளம்பரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக T H Clements and Son நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "கோவிட் -19 தொற்று மற்றும் பிரெக்சிட் பிரச்சனை காரணமாக கடும் ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளோம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே நிலைமை மிகவும் கடினமாக இருக்கிறது" என்று கூறி இருக்கிறது.



மேலும் நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரங்களில் இந்த வேலைகளில் ஈடுபடும் தொழிலாளியின் சம்பளம் பீஸ் வொர்க் கணக்கை சார்ந்தது என்பது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதாவது ஒருவர் எத்தனை பீஸ் காய்கறிகளை நாளொன்றுக்கு பறிக்கிறாரோ, அதன் அடிப்படையில் தான் ஊதியம் வழங்கப்படும் என்பது இதன் பொருள். ஆனால் ஒரு தொழிலாளியால் வழக்கமாக அதிக அளவு இதில் சம்பாதிப்பது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: