Home /News /employment /

ஆதார் துறையில் காலியிடம்.. யார் யார் விண்ணப்பிக்கலாம் ? - முழு விவரம்

ஆதார் துறையில் காலியிடம்.. யார் யார் விண்ணப்பிக்கலாம் ? - முழு விவரம்

 ஆதார் துறையில் காலியிடம்

ஆதார் துறையில் காலியிடம்

UIDAI Recruitment 2022 : தபால் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் காலியாக உள்ள Assistant Accounts Officer, Senior Accounts Officer போன்ற பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    ஆதார் துறையில் காலியாக உள்ள பணிகளின் விவரம் :

    இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) Senior Accounts Officer, Private Secretary, Assistant Accounts Officer, Assistant Section Officer மற்றும் Accountant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன.

    ஆதார் துறையில் வேலைக்கான விண்ணப்பிக்க வேண்டிய தகுதிகள் :

    விண்ணப்பத் தாரர்கள் மத்திய அரசு அலுவலகங்களில் AAO அல்லது ASO பதவிகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் Senior Accounts Officer, Private Secretary, Assistant Accounts Officer, Assistant Section Officer மற்றும் Accountant இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.

    சம்பள விவரம் :

    விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு செய்யப்படும் முறை :

    விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputationமுறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

    ஆதார் துறையில் வேலைக்கான விண்ணப்பிக்கும் வழிமுறை :

    ஆதார் துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை https://drive.google.com/file/d/1Yn0YFl5yu3c-2dVbWrGAo8sktkhV2XKg/view என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

    தபால் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

    Director (HR)'
    Unique ldentification Authority of India ([JIDAI), Regional Office, 7th F'loor, M'l'Nl,
    Telephone Exchange, GD Somani Marg, Cuffe Parade, Colaba, Mumbai - 400005
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி