• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • மத்திய அரசு ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசு ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு


UIDAI Recruitment 2021

UIDAI Recruitment 2021

ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 26.11.2021

  • Share this:
    ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம்.

    தற்போது ஆதார் நிறுவனம் Dy.Director, Section Officer மற்றும் இதர பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர். ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் UIDAI NISG
    வேலையின் பெயர் Dy. Director, Section Officer and Other
    காலிப்பணி இடங்கள் 23 காலிப்பணி இடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல்
    வயது 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 26.11.2021
    கல்வி தகுதி மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி துறை நிறுவனங்களில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
    வழக்கமான அடிப்பைடையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக வேண்டும்.
    அவற்றுடன் பணியில் 05 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் Level 06 முதல் அதிகபட்சம் Level 11 வரை
    சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    இணையதள முகவரி https://uidai.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://uidai.gov.in/images/Vacancy_Circular_dt_11_10_2021.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: