Home /News /employment /

வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய கல்லூரி சேர்க்கைகள் மற்றும் அரசுப் பணிகள்

வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய கல்லூரி சேர்க்கைகள் மற்றும் அரசுப் பணிகள்

தேர்வு

தேர்வு

தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் 2022- 24 என்ற திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுளளது.

    இந்த வாரம் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள்/ வங்கிப் பணிகள்/ கல்லூரி சேர்க்கை தொடர்பான விபரங்களை இங்கே காணலாம்.

    தேர்வு/ மாணவர் சேர்க்கை: 

    • UGC - NET Examination: நாளை வரை மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும்.


    • உதவிப் பேராசிரியர் பணிக்கான UGC - NET மற்றும் உதவித்தொகை பெறுவதற்கான CSIR - NET ஆகிய தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயமுறை நாளையுடன் (Deadline May 30th) நிறைவடைகிறது.

      UGC - NET தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு... விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

      விண்ணப்பதாரர், தங்களது முதுநிலை கல்வியோடு தொடர்புடைய பாடப் பிரிவை நெட் தேர்வுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று யூஜிசி அறிவுறித்தியுள்ளது. உதாரணமாக, அரசியலறிவு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற மாணவர்கள், நெட் தேர்வில் பொது நிர்வாகம் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று யுஜிசி முன்னதாக தெளிவுபடுத்தியிருந்ததது.

      2. Common Entrance Test - UG2022: மே 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.

      இளங்கலை பொது நுழைவுத் தேர்வுக்கான (Common University Entrance Test (UG) - 2022) விண்ணப்ப செயல்முறையை தேசிய தேர்வு முகமை மீண்டும் திறந்துள்ளது. இதுவரை விண்ணப்பம் செய்யாத மாணவர்கள், இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

      விண்ணப்பங்களை, 2022 மே 31ம் தேதி வரை https://cuet.samarth.ac.in/ என்ற இணையளத்தில் தாக்கல் செய்யலாம். இந்தத் தேதிக்குப்பின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

      3. இந்திய ரயில்வே தேர்வு

      இந்திய ரயில்வே வாரியத்தின் (நான் டெக்னிக்கல் பாப்புலர் கேட்டகரிஸ் – கிராஜூவேட் & அன்டர் கிராஜூவேட்) இரண்டாம் கட்ட தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் 5ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 15ம் தேதியும், 2ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 16ம் தேதியும், 3ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 17ம் தேதியும் தேர்வுகள் நடைபெற உள்ளது.

      அரசு வேலை:  

      தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம்: 

      தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் 2022- 24 என்ற திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுளளது.

      இந்த திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.



      முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலை - இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

      2. TNPSC: 36 செயல் அலுவலர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியது

      தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணியில் செயல் அலுவலர் பதவிக்கான (Executive Officer, Grade-IV included in Group-VIII Services) ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

      காலியிடங்கள்: 36 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்: 18.06.2022

      TNPSC Vacancies: இந்து அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பதவி, 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

      3. TNPSC குரூப் VII-B பணி : 42 காலியிடங்கள்

      தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் VII-B (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) செயல் அலுவலர் நிலை - III பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
      காலியிடங்கள் : 42.  விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்: 17.06.2022

       4. தமிழ்நாடு கல்வி ஊக்கத்தொகை திட்டம் (Tamil Nadu Education Fellowship) : 

      தமிழக அரசின் "இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், என் பள்ளி என் பெருமை" போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு கல்வி ஊக்கத்தொகை திட்டம் (Tamil Nadu Education Fellowship) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

      பணியிடங்கள் :-
















      Senior Fellows38ஏதேனும் ஒரு இளங்கலை படிப்புமாத ஊதியம் - ரூ.45,000
      Fellows 114ஏதேனும் ஒரு இளங்கலை படிப்புமாத ஊதியம் - ரூ.32,000

      விண்ணப்பம் செய்யும் காலம்:  ஜூன் 30 வரை

      பணிக்காலம்: ஜூலை 2022 முதல் ஜூன் 2024வரை

       



      5. 38,926 கிராம அஞ்சல் பணியாளர்கள்: 

      இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 38,926 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியது. தற்போது, ஆன்லைன் மூலம் விண்ணப்பபங்கள் பெறப்பட்டு வருகின்றன. இணையதளம் மூலம் விண்ணப்பபங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 5 ஆகும்.

      கல்வித்தகுதி: குறைந்தபட்ச பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

      6.எஸ். எஸ். சி 2065 காலியிடங்கள்: 

      மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அமைப்புகளில் காலியாக உள்ள 2065 பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையம் ஆள் சேர்ப்பு நடத்தவுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வழியாக 13.06.2022 (இரவு 23.00 மணி வரை ) ஆணையத்தின் ssc.nic.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

      7. 131 துணை முதல்வர் (Vice Principal) பணியிடங்கள்:

      தேசிய தலைநகர் டெல்லி பிரதேச அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பள்ளிகளில்  131 துணை முதல்வர் (Vice Principal) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

      https://upsconline.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 16.06.2022. ஆகும்.


      வங்கி வேலைவாய்ப்பு: 

      தொழில்துறை வளர்ச்சி உதவி மேலாளர், கடன் அலுவலர் மேலாளர், சீனியர் கடன் அலுவலர் மேலாளர் உள்ளிட்ட தொழில் நிபுணத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக்., படிப்புகளில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

      இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2022, ஜூன் 14. அன்றிரவே விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்.

      2. எஸ்பிஐ வங்கியில் 641 காலி பணியிடங்கள்:

      ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India), அதாவது எஸ்பிஐ வங்கி, ஒப்பந்த அடிப்படையில் 641 சேனல் மேனேஜர் பதவிகளுக்கு எஸ்பிஐயின் ஓய்வுபெற்ற அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்க தொடங்கி உள்ளது. குறிப்பிட்ட பதவிக்கான விண்ணப்ப செயல்முறை நடந்து வருகிறது மற்றும் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 7 ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

      3. கரூர் வைஸ்யா வங்கியில் வேலை:

      காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை கரூர் வைசியா  வங்கி வெளியிட்டுளளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 31.06.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Jobs

    அடுத்த செய்தி