ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

UGC-NET தேர்வு தேதி அறிவிப்பு - 83 பாடங்களுக்கான கணினி வழி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

UGC-NET தேர்வு தேதி அறிவிப்பு - 83 பாடங்களுக்கான கணினி வழி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

காட்சி படம்

காட்சி படம்

UGC -NET Exam : டிசம்பர் மாதத்திற்கான UGC-NET 2022 தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்காகவும் மற்றும் இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் தேசிய தகுதித் தேர்வு (NET) தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும்.

2022 டிசம்பர் மாதத்திற்கான தேர்வை 83 பாடங்களுக்குக் கணினி வழி தேர்வாக நடத்தவுள்ளனர். தேர்வுக்கு 2022 டிசம்பர் 29 இல் இருந்து 2023 ஜனவரி 17 ஆம் நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கான கட்டணம் செலுத்த ஜனவரி 18 வரை அவகாசம் உண்டு. பிப்ரவரியில் முதல் வாரத்தில் தேர்வு நிலையங்கள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 2 ஆம் வாரத்தில் அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 இல் இருந்து மார்ச் 10 வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு https://ugcnet.nta.nic.in/ மற்றும் https://nta.ac.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Also Read : 12ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: மத்திய ரிசர்வ் காவல் படையில் 1458 காலியிடங்கள் அறிவிப்பு

தேர்வு கட்டணமாக பொது பிரிவினர் ரூம.1,100, General-EWS/OBC-NCL  பிரிவினருக்கு ரூ.550 மற்றும் SC/ST/PwD பிரிவினருக்கு ரூ.275 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

First published:

Tags: NET, UGC