இளநிலை ஆராய்ச்சி படிப்பு (ஜேஆர்எப்) மற்றும் உதவி பேராசிரியர் தகுதிக்கான யுஜிசி-நெட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 30ம் தேதி ஆகும்.
கடந்தாண்டு கொரோனா நோய்த் தோற்று காரணமாக இரண்டாம் கட்ட தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜூன் ஆகிய இரண்டு தேர்வுகளையும் ஒருங்கே நடத்த (December 2021 and June 2022 merged cycles) தேசிய தேர்வு முகமை முடிவெடுத்துது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி தொடங்கியது.
https://ugcnet.nta.nic.in/ என்ற வலைதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. இந்நிலையில், பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று, முன்னதாக மே 20 வரை அறிவிக்கப்பட்டிருந்த கால அவகாசத்தை அரசு மேலும் நீட்டித்துள்ளது.
In pursuant to representations from the candidates, regarding submission of online application form for UGC-NET December 2021 and June 2022 (merged cycles), it has been decided to extend the last date for submission and fee payment to 30 May 2022.
— Mamidala Jagadesh Kumar (@mamidala90) May 22, 2022
யுஜிசி-நெட் தேர்வைப் பற்றி:
நெட் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக நியமனம் பெறுவதற்குத் தகுதி பெறுகின்றனர். முதுநிலை படித்த மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 83 பாடப்பிரிவுகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. விண்ணப்பதாரர், தங்களது முதுநிலை கல்வியோடு தொடர்புடைய பாடப் பிரிவை நெட் தேர்வுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று யூஜிசி அறிவுறித்தியுள்ளது. உதாரணமாக, அரசியலறிவு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற மாணவர்கள், நெட் தேர்வில் பொது நிர்வாகம் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று யுஜிசி முன்னதாக தெளிவுபடுத்தியிருந்ததது.
தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள்காலம் முழுவதும் செல்லுபடியாகும். இத்தேர்வு, இரண்டு தாள்களாகப் பிரிக்கப்படும்: தாள் 1 மற்றும் தாள் 2. தேர்வு காலம் மூன்று மணி நேரம். மொத்தம் 150 கேள்விகள். மேலும், நெட் தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் கணக்கிடப்படாது.
யுஜிசி நெட் தகுதி (Cut-off) மதிப்பெண்களாகத் தாள் I மற்றும் தாள் IIஇல் 40% ஆகவும், பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்டவர்/பொருளாதாரத்தில் பிந்தங்கியோருர்/திருநங்கைகளுக்கான தகுதி மதிப்பெண்கள் I மற்றும் II தாள்களில் 35% ஆகவும் உள்ளன. உதவிப் பேராசிரியர் பணிக்கு, தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், இரண்டு தாள்களின் மொத்த மதிப்பெண்களைப் பயன்படுத்தி ஒரு தகுதி பட்டியல் பாடவாரியாகவும் இனவகை வாரியாகவும் தயாரிக்கப்படும். அதேசமயம், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்குத் தனியாகத் பட்டியல் தயாரிக்கப்படும். பொதுவாக, தேர்வில் பங்கேற்றவர்களில் 6% பேர் தகுதி பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
Published by:Salanraj R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.