UCIL நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்
UCIL நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்
UCIL நிறுவனத்தில் வேலை
UCIL Recruitment 2022 : யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (யுசிஐஎல்) காலியாக உள்ள 05 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (யுசிஐஎல்) என்பது யுரேனியம் சுரங்கம் மற்றும் யுரேனியம் செயலாக்கத்திற்கான அணுசக்தித் துறையின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் 1967ல் நிறுவப்பட்டது.
இந்நிறுவனம் ஜதுகோரா, பதின், நர்வபஹர், துராம்திஹ் மற்றும் பாண்டுஹுராங் ஆகிய இடங்களில் சுரங்கங்களை இயக்குகிறது. இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 05 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம்
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (UCIL) நிறுவனம்
வேலையின் பெயர்
Medial Officer
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
05 காலிப்பணி இடங்கள்
வயது விவரம்
65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதி
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனங்களில் MBBS முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.