ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் இலவசப் பயிற்சி

ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் இலவசப் பயிற்சி
ஐடிஐ முடித்தவர்களுக்கு அப்பரென்டிஸ் பயிற்சி
  • News18
  • Last Updated: October 13, 2018, 5:32 PM IST
  • Share this:
ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனமான யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்-இல் அப்பரென்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி அக்டோபர் 24.

ஜார்க்கன்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் இயங்கி வரும் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனமானது யுரேனியம் பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 188 பேருக்கு அப்பரென்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

எந்தெந்த பிரிவுகள்: பிட்டர் மற்றும் எலக்ட்ரீசியன் பிரிவுகளில் தலா 59 காலியிடங்கள், வெல்டர் பிரிவில் 24, டர்னர்/மெஷினிஸ்ட் பிரிவில் 7, இன்ஸ்ட்ருமன்ட் மெக்கானிக்கல் பிரிவில் 5, டீஸல் மெக்கானிக் பிரிவில் 4, கார்பென்டர் மற்றும் பிளம்பர் பிரிவில் தலா 8, ஆட்டோ எலக்ட்ரீசியன் பிரிவில் மற்றும் பைப் ஃபிட்டர் பிரிவுகளில் தலா 7 காலியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு செப்டம்பர் 30, 2018 நிலவரப்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழில் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் (என்.சி.வி.டி) அங்கீகாரம் பெற்ற ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்வு முறை: தகுதி வாய்ந்தவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இது இலவச பயிற்சி என்பதால் விண்ணப்பக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. பயிற்சிக் காலத்தின்போது உதவித் தொகையும் வழங்கப்படும்.

கடைசி தேதி: விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி அக்டோபர் 24. மேலும், விவரங்களுக்கு www.ucil.gov.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
First published: October 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading