தமிழக காவல்துறையில் 202 சப்-இன்ஸ்பெக்டர் காலியிடங்கள் அறிவிப்பு

news18
Updated: September 18, 2018, 5:54 PM IST
தமிழக காவல்துறையில் 202 சப்-இன்ஸ்பெக்டர் காலியிடங்கள் அறிவிப்பு
கோப்புப் படம்
news18
Updated: September 18, 2018, 5:54 PM IST
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 202 சப்-இன்ஸ்பெக்டர் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் (விரல் ரேகை) பிரிவில் 202 காலியிடங்கள் உள்ளன. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் நடத்தப்படும் தேர்வு மூலமாக இந்த காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர், முன்னாள் படை வீரர்கள் உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவியல் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 28.

தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Loading...
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி, தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு,  http://www.tnusrbonline.org/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
First published: September 18, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...