ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தற்காலிக ஒப்பந்தத்தில் வேலை பாக்குறீங்களா? இந்த சட்டம் குறித்து கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

தற்காலிக ஒப்பந்தத்தில் வேலை பாக்குறீங்களா? இந்த சட்டம் குறித்து கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

காட்சிப் படம்

காட்சிப் படம்

கடைகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள், பீடி தொழிற்சாலைகள், போக்குவரத்து நிறுவனங்கள் போன்ற தொழில் நிறுவனங்கள் நீங்கள்  480 நாட்கள் தொடர்ந்து பணி புரிந்து வந்தால் நீங்களும் நிரந்தரத் தகுதி பெற முடியும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  2011-12 தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் படி (National Samplle Survey), நாட்டின் மொத்த பணியாளர்களால் கிட்டத்தட்ட 83% பேர் முறைப்படுத்தப்படாத பணியாளர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார நெருக்கடியில் மிகவும் பாதிக்கப்பட கூடியவராகவும், எந்தவித வேலை உத்தரவாத பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பும் இல்லாதவர்களாகவும் உள்ளனர்.

  பெரும்பாலான தனியார்  நிறுவனங்கள், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை பணியமர்த்தி வருவதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையை போக்குவதற்காகவே, 1981ம் ஆண்டில்  தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் (பணியாளர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்குதல்) சட்டம், 1981 இயற்றப்பட்டது.

  இந்த சட்டத்தின் கீழ், ஒரு தொழில் நிறுவனத்தில் (factories, plantations, motor transport undertakings, beedi industrial premises, shops and commercial establishments, catering establishments and other establishments which the government may notify from time to time) 24 மாத காலத்தில், 480 நாட்கள் தொடர் பணி புரிந்தால் அந்த தொழிலாளிக்கு பணி  நிரந்தரத் தகுதி வழங்க வேண்டும்.

  இந்த சட்டம் உலகளவில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நிரந்தரத் தகுதியினை பெற்றுள்ளனர்(விவரங்கள் கீழ் வருமாறு). இந்த சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு மேலும் அதிகமாகும் பட்சத்தில், பாதுகாப்பற்ற நிலைமையில் இருக்கும் தொழிலாளர்கள் அதிலிருந்து மீண்டு வர உதவும்.

  இதையும் வாசிக்க: ஒடிசாவைப் போல் தமிழகத்திலும் அரசு ஒப்பந்தப் பணி முறை ஒழிக்கப்பட வேண்டும்: ராமதாஸ்

  கடைகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள், பீடி தொழிற்சாலைகள், போக்குவரத்து நிறுவனங்கள் போன்ற தொழில் நிறுவனங்கள் நீங்கள்  480 நாட்கள் தொடர்ந்து பணி புரிந்து வந்தால் நீங்களும் நிரந்தரத் தகுதி பெற முடியும். நிரந்தர தகுதி பெற்றால் அரசின் சமூகப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (மகப்பேறு விடுமுறை, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி) கீழ் பயனடையலாம்.

  தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (பணியாளர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்குதல்) சட்டம், 1981 

   ஆய்வு எண்ணிக்கைதொழிற்சாலைகள் எண்ணிக்கைநிரந்தர அந்தஸ்து வழங்கப்பட்ட தொழிலாளர்கள்
  01.04.2011 - 31.03.201214,0642,01839,026
  01.04.2012 - 31.03.201319,1613,44447,970
  01.04.2013 - 31.03.201416,3773,31948,217
  01.04.2014 - 31.03.201517,3123,93148,310
  01.04.2015 - 31.03.201616,8453,62548,263
  01.04.2016 - 31.03.201710,3441,84320,894
  01.04.2017 - 31.03.20188,68182516,431
  01.04.2018 - 31.03.20193,65073122,745
  01.04.2019 - 31.03.20202,81963410,216
  01.04.2020 - 31.03.20211,4573684,948

  யாருக்கெல்லாம் இந்த சட்டம் செல்லுபடியாகாது? 

  1.  முன்னதைய 12 மாதங்களில் நாள் எதிலும் 20 அல்லது 20க்கு குறைவான தொழிலாளர்களை பணியமர்த்திய/ பணியமர்த்தப்பட்டிருக்கும் நிறுவனதிற்கு  இந்த சட்டம் பொருந்தாது. 

  2.  புதிதாக  தொடங்கப்பட்ட  தொழில் நிறுவனத்தின் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இச்சட்டம் பொருந்தாது.

  3.  சிறை மற்றும்  காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் நபர் ஒருவருக்கு இச்சட்டம் பொருந்தாது.

  4. கண்காணித்தல், மேற்பார்வையிடுதல் போன்ற பணிகளில் மாதச் சம்பளம் ரூ.3500க்கு மேல் வாங்கும் நபர் ஒருவருக்கு இச்சட்டம் பொருந்தாது.

  5. கட்டுமான பணிகளில் (கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், கால்வாய்கள், அணைகள் மற்றும் பிற) ஈடுபட்டிருக்கும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.

  இதையும் வாசிக்க64 காலியிடங்கள் அறிவித்த டிஎன்பிஎஸ்சி.. ரூ.1 லட்சத்துக்கு மேல் சம்பளம்!

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job, Job vacancies, Recruitment