ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மகளிர் தனிச்சிறையில் வேலை வாய்ப்பு; ஆர்முள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

மகளிர் தனிச்சிறையில் வேலை வாய்ப்பு; ஆர்முள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

Trichy Job Alerts: சமூகபணி (அல்லது), சமூக சேவை, சமூக அறிவியல்(அல்லது), குற்றவியல் (அல்லது) சமூகவியல் ஆகியவற்றில் ஆகியவற்றில் டிப்ளமோவுடன் வேறு ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  திருச்சி, மகளிர் தனிச்சிறையில் மதிப்பூதியத்தின் அடிப்படையில் (Honorarium) Social Case Work பணியிடம்  ஒன்று நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கல்விதகுதி: சமூகபணி (அல்லது) சமூக சேவை (அல்லது) சமூக அறிவியல் (அல்லது), குற்றவியல், முதியோர் கல்வி, Andragogy (வயது வந்தோர் கல்வி) ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  சமூகபணி (அல்லது), சமூக சேவை, சமூக அறிவியல்(அல்லது), குற்றவியல் (அல்லது) சமூகவியல் ஆகியவற்றில் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  சமூகபணி (அல்லது), சமூக சேவை, சமூக அறிவியல்(அல்லது), குற்றவியல் (அல்லது) சமூகவியல் ஆகியவற்றில் ஆகியவற்றில் டிப்ளமோவுடன் வேறு ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  இட ஒதுக்கீடு:  பொது சுழற்சி (General Turn)

  வயது வரம்பு: 01.07.2022 அன்று குறைந்தபட்சம், 23 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாம் வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதரவற்ற விதவை ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. 

  ஊதிய விகிதம் ரூ.15000/- (Honorarium- மதிப்பூதியம்)

  தகுதியுள்ள மேற்குறிப்பிட்ட வகுப்பினர் மட்டும் கீழ்க்கண்ட முகவரிக்கு கீழ்க்கானும் நகல்களுடன் வருகின்ற 10.11.2022க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  இதையும் வாசிக்க: ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம்... முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

  விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: சிறை கண்காணிப்பாளர், மகளிர் தனிச்சிறை,  காந்தி மார்க்கெட் காவல் நிலையம் அருகில்,  திருச்சி - 620 086.

  சாதிச் சான்றிதழ், குடும்ப ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்வி சான்று நகல்களை விண்ணப்பித்துடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job Vacancy, Recruitment