திருச்சி மண்டல ரயில்வே பணியில் வடமாநிலத்தவர் ஆதிக்கம்

திருச்சி மண்டல ரயில்வே பணியில் வடமாநிலத்தவர் ஆதிக்கம்
  • News18 Tamil
  • Last Updated: September 19, 2019, 9:17 PM IST
  • Share this:
திருச்சி ரயில்வே கோட்ட பணிகளில் வடமாநிலத்தவர்களை அதிக அளவில் வேலைக்கு சேர்ந்துள்ளதன் மூலம், அவர்களை தமிழகத்தில் நிரந்தரமாக குடியமர்த்த சூழ்ச்சி நடைபெறுவதாக திமுக, மதிமுக கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

அண்மையில் மதுரை ரயில்வே கோட்ட பணிகளில் தேர்வு செய்யப்பட்ட 572 பேரில், 11 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதில் இருந்து தமிழக இளைஞர்கள் மீள்வதற்குள் அதேபோன்ற பாரபட்சம் திருச்சி ரயில்வே கோட்ட பணி நியமனத்திலும் நடந்துள்ளது.

 


இந்நிலையில், முதல்கட்டமாக பொறியியல் பிரிவில், பணி நியமனம் பெற்ற 189 பேரில் 70 விழுக்காடு வட மாநிலத்தவர்கள் என்றும், இரண்டாம் கட்ட நியமனத்தில் தண்டவாள பராமரிப்பு பணிக்கான 262 பேரில் 39 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதர பிரிவில் 89 பேர் நியமனம் பெற்றதில் 5 பேர் மட்டுமே தமிழர்கள் ஆவர்.

இது, ரயில்வே தேர்வு எழுதியவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிகளில் வடமாநிலத்தவரை நியமிப்பதன் மூலம் இந்தி திணிப்பு நடைபெறுவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.மேலும், வடமாநிலத்தவர் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். முகவர்களின் உதவியுடன் இவர்கள் ரயில்வே பணிகளைப் பெற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதனிடையே, தங்களுக்கான வாய்ப்பை தட்டிப்பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவதாக தமிழக இளைஞர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்

அண்மையில் சேலம், திருச்சி மதுரை மண்டலங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டது. அப்போது, தமிழக ரயில்வே பணிகளில் உள்ளூர் இளைஞர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஒருமித்த குரலில் வலியுறுத்தப்பட்டது.

இதை பொருட்படுத்தாமல், தொடர்ந்து வடமாநிலத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதால் தமிழக இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
First published: September 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading