திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஒட்டுநர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது, பழங்குடியினருக்கான (Scheduled Tribe) குறைவு பணியிடத்தினை சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் Special Recruitment Drive) மூலம் நிரப்பிடும் ஆட்சேர்ப்பு அறிவிக்கையாகும். பழங்குடியினர், முன்னாள் இராணுவத்தினர் (பழங்குடியினர்), மாற்றுத் திறனாளிகள் (பழங்குடியினர்) இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பணி விவரங்கள்:
பதவியின் பெயர்: ஓட்டுநர்
பணி நியமன வகை : சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive)
வயது: 1.07.2022 அன்று விண்ணப்பதாரர் 18 வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் 55 வயதிற்குள்ளும், மாற்றுத் திறனாளிகள் 52 வயதிர்க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
இதர தகுதிகள்: மோட்டார் வாகன சட்டம் 1988(மத்திய சட்டம் 59/1988)- ன்படி தமிழக அரசின் தகுந்த அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம்: விண்ணப்பப் படிவத்தினை www.tiruchirappalli.nic.in என்ற இணையதளம் அல்லது தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளம் (National Career Service Portal) www.ncs.gov.in ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 18.01.2023 - பிற்பகல் 5.45 மணி வரை.
நிபந்தனைகள்:
2. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் உள்ளவாறு விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
இதையும் வாசிக்க: அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு : 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
விண்ணப்பதாரர் கல்வி தகுதி குறித்த சான்று. இருப்பிட சான்று, சாதி சான்று மற்றும் பணி முன் அனுபவ சான்று ஆகியவை சான்றொப்பமிடப்பட்டு கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். குறிப்பிடப்பட்ட சான்றுகள் இணைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இப்பணியிடம் பழங்குடியினருக்கான குறைவு பணியிடமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால் பழங்குடியினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் வில்லை ரூ.30 ஒட்டப்பட்ட சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் உறை (10 × 4 Inches Postal Cover) விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.