முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: திருச்சியில் அரசு வேலை இருக்கு - இன்றே விண்ணப்பியுங்கள்

8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: திருச்சியில் அரசு வேலை இருக்கு - இன்றே விண்ணப்பியுங்கள்

காட்சிப் படம்

காட்சிப் படம்

அலுவலக உதவியாளர் பணிக்கு  8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரவுக்காவலர் பணிக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

Govt Jobs Notification: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடம் மற்றும் ஒரு இரவுக்காவலர் பணிக்காலியிடம் நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இனசுழற்சி அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணிக்காலியிடத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீரமரபினர் - பொது-முன்னுரிமையுள்ளோர் (Most Backward Classes / De-notified Communities - General Priority) தேர்வு செய்யப்படுவர்.

இரவுக்காவலர் பணிக்காலியிடம் பொதுப்பிரிவினர் - பொது - முன்னுரிமையற்றவர்(General Turn General- Non-Priority) தகுதியுடையவர்கள் ஆவர்.

கல்வி தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு  8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரவுக்காவலர் பணிக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.07.2022 அன்றைய தேதியில் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக இருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 வயதிற்கு மிகாமலும், BC, MBC/DNC பிரிவினர் 34 வயதிற்கு மிகாமலும், SC/ST மற்றும் SCA பிரிவினர் 37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இதையும் வாசிக்க: Current Affairs 1: போட்டித் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய தலைப்புகள் இதோ!

தகுதியான விண்ணப்பதாரர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி விண்ணப்பம் பெற்று, உரிய விவரங்களை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பாரதிதாசன் சாலை, கண்டோன்மென்ட், மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் (பின்புறம்) திருச்சிராப்பள்ளி-620 001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் வாயிலாகவோ சமர்ப்பிக்கலாம்.

இதையும் வாசிக்க: சென்னை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வேலை : நேர்காணல் மூலம் நியமனம்

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 27.01.2023 மாலை 5.45 மணிக்குள். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக பரிசீலிக்கப்பட மாட்டாது.

First published:

Tags: Tamil Nadu Government Jobs