ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

திருச்சியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 5,000 இடங்களை நிரப்ப முடிவு

திருச்சியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 5,000 இடங்களை நிரப்ப முடிவு

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு செய்திகள்

Trichy Mega private job Fair camp: வேலைதேடும் இளைஞர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி  பயன் பெறலாம் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  திருச்சி மாவட்டம் அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப பயிலகத்தில் நாளை மறுநாள் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.  இந்த வேலைவாய்ப்பு முகாமினை திருச்சி மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலை வாய்ப்பு  மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்துகிறது.

  இந்த வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 5000க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

  முன்னதாக, இந்த தனியார்  வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடுகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்  வே. கணேசன் இதற்கு தலைமை தாங்கினார்.

  இதையும் வாசிக்க: மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி வருகின்ற(5.11.2022) சனிக்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து   ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.  தமிழ்நாட்டில், திமுக ஆட்சி அமைத்த பிறகு  இதுவரை 66 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக 1 இலட்டசத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்று தந்துள்ளோம். கடந்த 15.10.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தனியார் தொழில் நிவனங்களில் பணிபுரியும் வகையில் 1 இலட்சமாவது பணி நியமன ஆணையை வழங்கியதாக தெரிவித்தார்.

  இதையும் வாசிக்க: தமிழ்நாட்டில் அக்னிபத் சேர்க்கை முகாம்: இந்திய ராணுவம் முக்கிய அறிவிப்பு

  மேலும், வேலைதேடும் இளைஞர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி  பயன் பெறலாம் என்று தெரிவித்தார்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Apprenticeship, Job, Recruitment