ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஆர்வம் குறைகிறதா.... தரவுகள் சொல்வது என்ன?

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஆர்வம் குறைகிறதா.... தரவுகள் சொல்வது என்ன?

காட்சிப் படம்

காட்சிப் படம்

TNPSC: பெரும்பாலான தேர்வர்கள் உடனடி வாழ்க்கைக்குத்  தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை உழைப்பின் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் குரூப் 1 நிலைக்கான முதல்நிலைத் தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

முன்னதாக, துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான குரூப் 1 தேர்வு அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. 3.22  லட்சம் பேரிடம் இருந்து விண்ணப்பங்கள்  பெறப்பட்டது.

இதற்கான, முதல்நிலைத் தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. 1.9 லட்சம் பேர்மட்டுமே நேற்று நடைபெற்ற முதல்நிலைத் தேர்வினை எழுதினர். வருகைப்பதிவு எண்ணிக்கை 59% ஆகும். அதாவது, விண்ணப்பித்தவர்களில் 41% பேர் தேர்வெழுத வரவில்லை.  

கொரோனா தொற்றுக்கு முந்தைய காலங்களில் , குரூப் 1 தேர்வுக்கு வரதாவர்களின் எண்ணிக்கை சராசரி 30% ஆக கணக்கிடப்படும் நிலையில்,தற்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குரூப் 1 காலியிடங்கள்பெறப்பட்ட எண்ணிக்கைதேர்வெழுதியவர்கள் எண்ணிக்கைதேர்வுக்கு வராதவர்கள்  விகிதம்
2019 Posts included in Combined Civil Services–I Examination (Group-I Services) 2016-20191812.29 லட்சம்1,6 லட்சம்24%
2021Combined Civil ServicesExamination-I (Posts included inGroup-I Services), 2020662.56 லட்சம்1.3 லட்சம்49%
2022- 23923.22 லட்சம்1.9 லட்சம்41%

 

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு குரூப் I தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வெழுதிய தேர்வர்களின்  8 சதவீதம்  அதிகரித்துள்ளது. இருப்பினும்,  2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவாகவும்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில்:

நடப்பு ஆண்டில், டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இதுநாள் வரையில், 26 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 5413 காலி இடங்களுக்கான குரூப் 2 தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடத்தியது. 11.7 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் தேர்வெழுதினர். மேலும், 7382 காலிஇடங்களுக்கான குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி நடைபெற்றது. 16.2 லட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 14 லட்சம் பேர்தேர் வெழுதினர்.

ஒரே ஆண்டில், அடுத்தடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்படுவது தேர்வர்களுக்கு சாதாகமாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக,  குரூப் 1, 2 தேர்வுகெளுக்கென தயாராகி வரும் மாணவர்கள் குரூப் 4 தேர்வினை எளிதாக அணுக முடியும். அதே போன்று, குரூப் 4 தேர்வுக்கென தயாராகி வரும் மாணவர்கள் குரூப் 2 முதல்நிலைத் தேர்வினை ஓரளவுக்கு எளிதாக அணுக முடியும்.

உதாரணாமாக , 2020-21  ஆண்டில், டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் ஒரே ஒரு முதல்நிலைத் தேர்வை  (குரூப் 1 முதல்நிலைத் தேர்வு: 03.01.2021) மட்டுமே நடத்தியது. அத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் கிட்டத்தட்ட 49% பேர் தேர்வை  எழுதாமல் புறக்கணித்துள்ளனர்.

இதையும் வாசிக்க: தமிழ் வழியில் பயின்றவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சாதிக்கின்றனரா? தரவுகள் சொல்வது என்ன?

அதேபோன்று,  2018-2019ஐ பொறுத்தமட்டில், டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், மொத்தமாக  4 முதல்நிலைத் தேர்வுகளும், 26 முதன்மைத் தேர்வுகளையும் நடத்தியது. இந்த நான்கு முதல்நிலைத் தேர்வுகளில் , 1338 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வும் (தேர்வு தேதி-  11.11.2018), 9882 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வும் (01.09.2019), 181 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வும்  (03.03.2019) அடங்கும். 01.09.2019 அன்று நடைபெற்ற  குரூப் 1 தேர்வில், தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 76% ஆக  காணப்படுகிறது.

ஆர்வம் குறைகிறதா? 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுத் தேர்வுகள் மூலம் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களும் உயரிய பதவிகளை அடைந்து வருகின்றனர். தற்போதும் இத்தேர்வுக்கு தயாராகி வரும் பெரும்பாலான தேர்வர்கள் உடனடி வாழ்க்கைக்குத்  தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை நிறுவனங்களில் உழைப்பின் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர். பெண் தேர்வர்கள் கூடுதலாக குழந்தைப் பேறு, பிள்ளை வளர்ப்பு போன்ற சுமைகளையும் சுமந்து வருகின்றனர். எனவே, தங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான பொழுதுகளை குரூப் 1  தேர்வுக்கு முதலீடு செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளனர் ( இத்தனைக்கும், குரூப் 2 மற்றும் 1 தேர்வுக்கு ஒரே நிலையான கல்வித் தகுதி, தெரிவு முறை)). சமூக, பொருளாதார  வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தைச் சேர்ந்த மக்கள், இன்னமும் குரூப் 1 பதவிகளை  தாமதாக்கிக் கொள்ள வில்லையோ என்ற ஐயமும் எழுகிறது.

இதையும் வாசிக்க: இ-சேவை மூலம் PSTM சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கும் விண்ணப்பதாரர்கள் - அரசு நடவடிக்கை எடுக்குமா?

மேலும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் போல் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்  ஆண்டுக்கு ஒருமுறை குரூப் 1 தேர்வுகளை நடத்துவதில்லை. இதனால், தகுதியான தேர்வர்கள் பலர் முதல்நிலைத் தேர்வுக்கான அதிகபட்ச  வயது வரம்பை கடந்து விட்ட நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பின்னணியில், குரூப் 1 முதல்நிலைத் தேர்வுகளை எழுதுவதற்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 40 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 ஆகவும் உயர்த்த தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும் என்ற பாமக நிறுவனர் ராமதாஸ்-ன்  கோரிக்கை மிக நியாயமானதாக இருக்கிறது.

Published by:Salanraj R
First published:

Tags: Tamil Nadu Government Jobs, TNPSC