• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • ஆசிரியர் பணியிடத் தேர்வு: பார்வையற்றவர்களுக்கான பதிலி எழுத்தர்கள் எழுத அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஆசிரியர் பணியிடத் தேர்வு: பார்வையற்றவர்களுக்கான பதிலி எழுத்தர்கள் எழுத அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பதிலி எழுத்தர்கள் எழுத அனுமதி

பதிலி எழுத்தர்கள் எழுத அனுமதி

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிட தேர்வுக்கு பதில் எழுத்தர்களை அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  • Share this:
    ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிட தேர்வுக்கு பார்வை யற்றவர்களுக்கான பதிலி எழுத்தர்களை அனுமதித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.

    2019 ஆம் ஆண்டு TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான அறிவிப்பினை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் இன்றுவரை பார்வையற்றோருக்கான பதிலி எழுத்தர்கான வழிகாட்டு நெறிமுறைகள் appointment of scribe guidelines உருவாக்கப்படாமல் மீண்டும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறி தேர்வுக்கான நடைமுறைகளை அனுமதிக்க இயலாது என்று இடைக்கால தீர்ப்பினை உயர்நீதிமன்றம் வழங்கியது.

    மேலும் இந்த வழக்கு 22.09.2021 அதாவது இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதி அரசர்கள் தெரிவித்திருந்தார்கள். இதற்கிடையில் நேற்று மாலை தமிழக அரசால் பார்வையற்றவர்களுக்கான பதிலி எழுத்தர்கான வழிகாட்டு நெறிமுறைகளுகான appointment of scribe guidelines அரசாணையினை வெளியிட்டு உள்ளது.

    ALSO READ |  வாட்ஸ்அப்-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கான நோட்ஸ் - எப்படி பெறுவது?

    2207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 17 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நவம்பர் 13 ,14, 15 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

    நீதிமன்ற உத்தரவை பின்பற்றி பார்வையற்றவர்களுக்கான பதில் எடுத்தவர்களை அனுமதித்து தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடாததால் அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தற்போது பதில் எழுத்தர்களை அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: