முதுநிலை ஆசிரியர் பட்டதாரி நியமனத்திற்கு தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், இயற்பியல் உள்ளிட்ட 15 பாடங்களுக்கான தற்காலிகத் தெரிவுப்பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முன்னதாக, 2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்,உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினிப் பயிற்றுநர் நிலை - 1 நேரடி நியமனத்திற்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதற்கான, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதத்தில் கணினி வழித் தேர்வுகள் (Computer Based Test) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதனையடுத்து, ஆள்சேர்ப்பு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள 17 பாடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 2-ம் முதல் 4-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டன.
முதற்கட்டமாக, புவியியல், வரலாறு, இயற்பியல் ஆகிய மூன்று பாடங்களுக்கு தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது பொருளியல், கணிதம், கணினி அறிவியல், ஆங்கிலம், தமிழ், உடற்கல்வி, வணிகம், தாவரவியல், விலங்கியல், வேதியியல், அரசியல் அறிவியல், வீட்டு அறிவியல் ஆகிய படங்களுக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வாணையத்தின் trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ்களை நேரில் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்:
வெளியிடப்பட்ட தற்காலிகத் தெரிவுப் பட்டியலில் சில தேர்வர்கள் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த ஒரு சில சான்றிதழ்களை சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்காததால் அப்பணிநாடுநர்களின் தெரிவு withheld-ல் வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு withheld-ல் வைக்கப்பட்டுள்ள ஒரு சில பணிநாடுநர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்காத சான்றிதழ்களை தற்போது சமர்ப்பித்துள்ளனர்.
இதையும் வாசிக்க: சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியீடு
ஆனால், இன்னும் சில தேர்வர்கள் இன்றுவரை சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே, தற்காலிகத் தெரிவுப்பட்டியலில் இடம் பெற்று withheld for want of certificate எனக் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வர்கள் உடனடியாக 19.09.2022 மற்றும் 20.09.2022 ஆகிய நாட்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தங்களது சான்றிதழ்களை நேரில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt teachers, Teacher Education, TRB