Home /News /employment /

 பாலிடெக்னிக் விரிவுரையாளர் சான்றிதழ் சரிபாரிப்பு: 100க்கும் மேற்பட்ட பிற மாநிலத்தவர்கள் பங்கேற்பு

 பாலிடெக்னிக் விரிவுரையாளர் சான்றிதழ் சரிபாரிப்பு: 100க்கும் மேற்பட்ட பிற மாநிலத்தவர்கள் பங்கேற்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி தேர்விலும் ஏராளமான பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

TRB Government Polytechnic Lecturers Recruitment: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில்  வெளிமாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான தேர்வர்கள்  கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்தாண்டு 1060 பாலிடெக்னிக்  விரிவுரையாளர் காலிப்பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வை நடத்தியது. இதில், ஆந்திரா,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் TNPSC நடத்தும் தேர்வில் உள்ளது போல தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கவில்லை. இதன் காரணமாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்கள் பலர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றுள்ளனர்.

ஏற்கனவே தமிழகத்தில் ரயில்வே, பெட்ரோலியம்,  அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு பணிகளில் ஏராளமான வடமாநிலத்தவர் பணியில்  சேர்ந்து வருகின்றனர். அண்மையில், அஞ்சல்துறை பணியில் போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து நூற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்கள் பணியில் சேர்ந்தது அரசு தேர்வுகள் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது, மாநிலம் முழுவதும் கடும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இத்தகைய போக்கு காரணமாக தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை கிடைப்பதில் பல்வேறு சவால்கள் எழுந்துள்ளன.

இதையும் வாசிக்க  கடந்த ஆண்டை விட நீட் தேர்வு சிரமமாக இருந்தது - மாணவர்கள் கருத்து

இந்த நிலையில்தான் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி தேர்விலும் ஏராளமான பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில்ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2148 நபர்களை அழைத்துள்ளது. இவர்கள் கடந்த மூன்று நாட்களாக சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றுள்ளனர். இதில் பலர் சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு தமிழகத்தில் பணியில் சேரக்கூடிய வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளத்து.

இதையும் வாசிக்க:  அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலிப் பணியிடங்கள்: ரூ.50,000 வரை சம்பளம்

கடந்த 2018ம்  ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதால் அந்த தேர்வை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு புதிதாக கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Salanraj R
First published:

Tags: Recruitment, Teacher

அடுத்த செய்தி