தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து அரசு, கலை, அறிவியல் மற்றும் கல்வியில் துறைகளில் உள்ள உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்றும், இதன் மூலம் 4000 இடங்கள் நிரப்பப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு ஆசிரயர் தேர்வு வாரியம் 2023ம் ஆண்டுக்கான தேர்வு திட்ட அட்டவணையை வெளியிட்டது. இந்த அட்டவணையின் படி, 2023ல் 4000 உதவி பேராசிரியர்கள், 6553 இடைநிலை ஆசிரியர்கள், 3,587 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 15149 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.
4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்:
தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து அரசு, கலை, அறிவியல் மற்றும் கல்வியில் துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. கணிதம், அறிவியல், இயற்பியல், வேதியல், தாவரவியல், இசை, வரலாறு உள்ளிட்ட பல்வேறு பாடங்களின் கீழ் உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முதுகலைப்பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்று, பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வுகளில் ஏதேனும் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படிகிறது.
இதையும் வாசிக்க: TRB : 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு... 15,000 காலி பணியிடங்கள்.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
முன்னதாக, இந்த பதவிக்கு நேர்முகத் தேர்வில் பெற்ற வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால்,கடந்த செப்டம்பர் மாதம் உதவி பேராசிரியர் பணி நியமனம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, " வரும் காலங்களில் எழுத்துத் தேர்வின் மூலமே நியமன முறை இருக்கும்" என்று தெரிவித்தார்.
இதற்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தனது திட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Nadu Government Jobs, TRB