இட ஒதுக்கீடும், வாய்ப்புகளும் கொடுத்தால் முன்னேறுவோம்..! - திருநங்கை அபர்ணா

இட ஒதுக்கீடும், வாய்ப்புகளும் கொடுத்தால் முன்னேறுவோம்..! - திருநங்கை அபர்ணா
திருநங்கை அபர்ணா
  • News18 Tamil
  • Last Updated: February 11, 2020, 11:17 AM IST
  • Share this:
திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீடுதான், அவர்களின் வாழ்வில் புது வழிகாட்டும் என்று தெரிவித்துள்ளார், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி கார் ஓட்டுநராகியிருக்கும் திருநங்கை அபர்ணா.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களை, நுழைவு வாயிலில் இருந்து அலுவலக வாசல் வரை அழைத்துச் செல்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பேட்டரி கார் இயக்கப்படுகிறது.தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள், மாவட்ட நிர்வாகத்தின் பணிகளுக்கு தங்களுக்கு வாய்ப்பு வழங்குமாறு தொடர்ச்சியாக விண்ணப்பித்து வந்த நிலையில், திருநங்கை அபர்ணாவுக்கு பேட்டரி கார் ஓட்டுநர் பணி வழங்கப்பட்டுள்ளது.

“தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என ஆட்சியர் ஏற்கனவே உறுதி அளித்திருந்தார். திருநங்கைகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இப்போது கோவில்பட்டியைச் சேர்ந்த திருநங்கை அபர்ணா என்பவருக்கு பேட்டரி காரை இயக்கும் வேலை அளிக்கப்பட்டுள்ளது. தகுதிக்கேற்ப வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரப்பு தெரிவித்துள்ளது.
ஓட்டுநர் பணியில் இணைந்திருக்கும் திருநங்கை அபர்ணா நம்மிடம் பேசியபோது, ”பத்தாம் வகுப்பு முடித்து, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 10-ஆம் வகுப்பு தகுதிக்கு வைக்கப்படும் தேர்வுகளை எழுதி வருகிறேன். ட்ரைவிங் தெரியும், லைசென்ஸும் உள்ளது என்பதால் விண்ணப்பித்திருந்தேன். என்னை தொடர்ச்சியாக ஊக்கப்படுத்தி, இப்படியான வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வருபவர் செயற்பாட்டாளர் திருநங்கை கிரேஸ் பானு அவர்கள்தான்.

தேர்வு எழுதினாலும், மத்திய மாநில அரசுகள் திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீட்டை வேலை வாய்ப்புகளில் அளித்தால் எங்களின் வாழ்க்கை தரம் முன்னேறும். பாலியல் தொழில் செய்து தீரவேண்டிய அவலமும் குறையும். வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் திருநங்கைகளும், திருநம்பிகளும் முன்னேறுவார்கள். சுய உதவிக் குழுக்கள் அமைப்பது வாழ்வுக்கு வழி அமைக்கும்” என்று பேசியுள்ளார்.மேலும், தனக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைக்க காரணமான தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கும், செயற்பாட்டாளர் திருநங்கை கிரேஸ் பானுவுக்கும் நன்றி தெரிவித்தார்.

Also See...

 
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading