ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்தியக் கடற்படையில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?

இந்தியக் கடற்படையில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?

தொழிற்பயிற்சி

தொழிற்பயிற்சி

Trade Apprentices in Indian Navy : இந்திய ராணுவ கடற்படையில் ஐடிஐ படித்த இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய ஒரு வருடத் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய ராணுவ கடற்படையின் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள கடற்படை டாக்யார்ட் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-24 ஆண்டுக்கான ஒரு  வருடப்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பயிற்சிக்குத் தேவையான விவரங்கள் கீழ் வருமாறு.

பயிற்சி விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்
Electronics Mechanic36
Fitter33
Sheet Metal Worker33
Carpenter27
Mechanic (Diesel)23
Pipe Fitter23
Electrician21
R & A/C Mechanic15
Welder (Gas & Electric)15
Machinist12
Painter (General)12
Instrument Mechanic10
Mechanic Machine Tool Maintenance10
Foundryman5
மொத்தம்275

வயது வரம்பு:

2023-24 ஆண்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க 02.05.2009 ஆம் ஆண்டு முன்பு பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

10 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஐடிஐ 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை:

அரசு விதியின் படி 25.09.2019 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு எண்: 561 படி உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும். எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

தேர்வு விவரங்கள்:

28.02.2023 ஆம் தேதி தேர்வு நடைபெறும்,தேர்வுக்கான முடிவுகள் 03.03.2023 ஆம் தேதி வெளியிடப்படும். மார்ச் 6 ஆம் தேதிகளில் இருந்து 10 ஆம் தேதிவரை நேர்காணல் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.apprenticeshipindia.gov.in என்ற முகவரியில் விண்ணப்பதார்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவுடன் உங்களுக்கு சுயவிவரங்கள் கொண்ட கணக்கு தொடங்கப்படும். அதன் விவரங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் மேலும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட்டை நிரப்பி அதனுடன் இணைத்து தபால் மூலம் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Also Read : 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும் : ரூ.81,100 சம்பளத்தில் கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Officer-in-Charge (for Apprenticeship), Naval Dockyard

Apprentices School, VM Naval Base S.O., P.O., Visakhapatnam - 530 014,

Andhra Pradesh.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய : https://indiannavy.nic.in/

முக்கிய நாட்கள்:

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 02.01.2023

தபால் மூலம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 09.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Apprentice job, Apprenticeship, Indian Navy, Jobs