Home /News /employment /

தாட்கோ கழகம் செயல்படுத்தும் முக்கியத் திட்டங்கள் என்ன?

தாட்கோ கழகம் செயல்படுத்தும் முக்கியத் திட்டங்கள் என்ன?

காட்சிப் படம்

காட்சிப் படம்

திட்டப் பயனாளிகன் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு  ரூ. 2 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களை (SC- ST) மக்களை மேல் கொண்டு வர மத்திய/மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தாட்கோ கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    1. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பள்ளிகள், வீடுகள், குடியிருப்புகள் போன்ற கட்டுமானப் பணிகளை செயல்படுத்தும் கட்டுமான நிறுவனமாக  1974ம் ஆண்டு  தாட்கோ கழகம்  தொடங்கப்பட்டது.

    2. 1980களுக்குப் பிறகு, பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதன், சமீபத்திய அங்கீகரிக்கப்பட்ட மற்றும் செலுத்தப்பட பங்கு மூலதனம் (Authorised Share Capital)  ரூ.147.11 கோடியாக உள்ளது. இந்த மூலதனத்தை மத்திய/மாநில அரசுகள் 51:49 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன.

    3. ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் மக்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களை தாட்கோ கழகம் செயல்படுத்தி வருகிறது.

    4. இன்றைய சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு அடிப்படையாய் இருப்பது நில உடமையாகும். எனவே, நிலமற்ற ஆதிதிராவிட மகளிரை நில உடமையாளராக்கிட 'நிலம் வாங்கும் மற்றும் நில மேம்பாட்டுத் திட்டம்' என்ற சிறப்புத் திட்டத்தை தாட்கோ செயல்படுத்தி வருகிறது.

    5. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற வகுப்பினரிடம் இருந்து நிலம் வாங்கும் பயனாளர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது.

    6. தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்: 18 முதல் 65 வயதுக்கு வரை உள்ள ஆதிதிராவிட பிரிவைச் சேர்ந்தவர்கள் வருவாய் ஈட்டும் தொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்படுகிறது. திட்டத்தொகையில் 30% அல்லது அதிகபட்சமாக 2.25 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

    7. இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம்:  படித்த ஆதிதிராவிட இளைஞர்களுக்கு தங்களுக்கு தெரிந்த சுய தொழில் துவங்க இட்டதிட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது.  18-க்கு மேலும் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்

    8.  இளம் மருத்துவர்கள் கிளினிக் அமைத்தல் :  மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS), சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா (BNYS) ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றவ ஆதிதிராவிட  மாணவர்கள் சொந்தமாக மருத்துவ சிகிச்சை / ஆய்வகம் / மருந்தகம் அமைப்பதற்கு இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது.

    இதையும் வாசிக்கஐபிபிஎஸ் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி; ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

    9. மேலாண்மை இயக்குநர்  (Managing Director’s Discretionary Fund)மற்றும் மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதித் திட்டம் (Collector’s Discretionary Fund) :  தாட்கோ திட்டங்கள் எதிலும் உடனடியாக பயன்பெற இயலாதவர்களுக்கு விரைவில் சுய தொழில் புரிந்து பயன்பெறும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறாத ஆதரவற்ற விதவைகள், ஊனமுற்றோர், 40 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் மற்றும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் இல்லாத குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

    10. தாட்கோ மூலம் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டப் பயனாளிகன் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு  ரூ. 2 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Employment, Tamilnadu

    அடுத்த செய்தி